அரிசி என்று சொல்லில் ஆயிரம் விஷயங்களை நம் முன்னோர்கள் புதைத்து வைத்துள்ளனர். இதில் புதைந்துள்ள சத்துக்களும் ஏராளம். அதேநேரத்தில் மக்களுக்கு கேடுவிளைவிப்பதை விற்று கோடி லாபம் பார்க்கத் துணிந்த வணிக நிறுவனங்கள் அரிசியைக் குறைகூறி தங்கள் விளைபொருட்களை வாடிக்கையாளர்களுக்குச் சேர்த்தனர். இதன் உள்நோக்கம் தெரியாமல், நாமும் பெருமைக்காக வாங்கி சாப்பிட ஆரம்பித்ததன் பலன்தான், இன்று ஆயிரக்கணக்கான நோய்களும் நம்முடன் சொந்தங்களாக வலம்வருகின்றன.
ஆனால் உண்மையில் அரிசியில் எத்தனை சத்துக்கள் இருக்கின்றன தெரியுமா? பல்வேறு நோய்களில் இருந்து நாம் விடுபடவும், இனி வராமல் தடுக்கவும் அடித்தளம் அமைத்துக் கொடுக்கின்றன நம்முடைய பாரம்பரிய அரிசி வகைகள். அவற்றின் பட்டியல் இதோ!
கருப்பு கவுனி அரிசி
இது மன்னர்கள் சாப்பிட்ட அரிசி.
புற்றுநோய் வராமல் தடுப்பதுடன், இன்சுலின் நன்றாகச் சுரக்கும்.
மாப்பிள்ளை சம்பா அரிசி
நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.
பூங்கார் அரிசி
சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும். தாய்ப்பால் அதிகரிக்கும்.
காட்டுயானம் அரிசி
நீரிழிவு, மலச்சிக்கல், புற்றுநோய் சரியாகும்
கருத்தக்கார் அரிசி
மூலம், மலச்சிக்கல் ஓடிப்போகும்
காலாநமக் அரிசி
புத்தர் சாப்பிட்டதும் இந்த அரிசியைத்தான். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகத்திற்கு ஏற்றது.
மூங்கில் அரிசி
மூட்டுவலி, முழங்கால் வலி குணமாகும்
அறுபதாம் குறுவை அரிசி.
எலும்பு முறிவுகள் குணமாகும்.
இலுப்பைப்பூசம்பார் அரிசி
பக்கவாதத்திலிருந்து குணமடைய உதவும். கால்வலியும் காணாமல் போகும்.
தங்கச்சம்பா அரிசி
பல், இதயம் வலுவாகும்
கருங்குறுவை அரிசி
இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்
கருடன் சம்பா அரிசி
இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்
கார் அரிசி
தோல் நோய்க்கு தீர்வு கிடைக்கும்.குடல் சுத்தமாகும்
நிலம் சம்பா அரிசி
இரத்த சோகை நீங்கும்
சீரகச் சம்பா அரிசி
அழகு தரும். எதிர்ப்பு சக்தி கூடும்
தூய மல்லி அரிசி
உள் உறுப்புகள் வலுவாகும்.
குழியடிச்சான் அரிசி
தாய்ப்பால் அதிகரிக்கும்
சேலம் சன்னா அரிசி
எடையினை குறைக்க உதவுகின்றது
சிவப்பு காட்டு அரிசி
இரத்தத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தை குறைக்கிறது சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது
சிவப்பு அரிசி
கனிம (தாது) சத்துக்கள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள் எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது
குள்ளகாற் அரிசி
இரத்தம் உடல் சுத்தமாகும். தோல் நோய் குணமாகும்
குதிரைவாலி
தசைகள் எலும்புகள் வலுவாகும்.ரத்த நாலங்ரளில் ஏற்படும் அடைப்பை போக்கும்
கை குத்தல் அரிசி
உடலிற்கு தேவையான சத்துகள் கிடைக்கின்றது. புற்று நோயினை வராமல் தடுக்கின்றது. சிறுநீரக கல் வராமல் தடுகின்றது.
சாமை
தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்
பிசினி அரிசி
மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும்
சூரக்குறுவை அரிசி
பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்
வாலான் சம்பா அரிசி
சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும் இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு ஆண்மை சக்தி பெருகும்
வாடன் சம்பா அரிசி
அமைதியான தூக்கம் வரும்
ஆக நம் வாழ்வில் இரண்டறக் கலந்தவற்றுள் அரிசியும் ஒன்று. அதனால்தான் மண்ணில் வந்தபோதும், அரிசி சோறு ஊட்டி நம்மை வரவேற்கின்றனர்.
பின்னர் நம்மை வழிஅனுப்பிவைக்கும்போதும் இறுதிமரியாதையிலும் அரிசியைச் சேர்த்துள்ளனர்.
எனவே இனியாவது அரிசியின் உன்னதத்தைத் புரிந்துகொண்டு பீசா, பர்கருக்கு விடைகொடுப்போம். பாரம்பரிய அரிசியை உணவில் சேர்த்துக்கொண்டு நோய்களுக்கு குட்பை சொல்வோம்.
மேலும் படிக்க...
அஞ்சல் துறையில் வேலை: 8, ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
ஏடிஎம்மில் ரொக்கப்பணம் செலுத்தினால் இனி கட்டணம் - ICICI வங்கி அறிவிப்பு!
தீபாவளி Special offerல் வட்டி விகிதம் அதிரடிக் குறைப்பு- வீடு,காரு வாங்க அடிக்கிறது யோகம்!
Share your comments