தண்ணீர்.......பஞ்சம் தீருமா?
சுத்தமான தண்ணீர் எப்போது கிடைக்கும்?
அதிகரித்துவரும் தண்ணீர் பிரச்சனை!
நம் மக்களுக்கு எதில் தான் பிரச்சனை இல்லை. ஒரு விஷயம் நடந்தாலும் பிரச்சனை, நடக்கவில்லை என்றாலும் பிரச்சனை. தற்போது இருக்கும் நிலையில் மழை பெய்யாவிட்டால் தண்ணீர் பிரச்சனை, மழை பெய்தால் கொசு- டெங்கு, மலேரியா நோயால் பிரச்சனை. எதில் யாருடைய தப்பு! தண்ணீர் கிடைக்கும் போது அதை சேகரிக்காமல் மழையை ரசிப்பதோடு நிறுத்திவிட்டு மழைநீர் வீணாவதை பார்க்கும் மக்களின் மேல் தப்பா? இல்லை தண்ணீர் பஞ்சத்தில் இருக்கும் மக்களுக்கு மழை வழங்கும் இயற்கையின் மேல் தப்பா? அதே நேரத்தில் மழை பெய்வதால் அசுத்தமான சுற்றுப்புற இடங்களில் தண்ணீர் தேங்கி டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு யார் காரணம்? இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளாத மக்கள் மீதா இல்லை, தேங்கி இருக்கும் தண்ணீரில் உருவாகும் கொசுவின் மீதா. யாருடைய தப்பு!
கிடைக்கும் போதே மழை நீரை சேமித்து கொள்ளுங்கள், மழை நேரம் மட்டுமின்றி சாதாரனமாகவே தங்கள் சுற்றுப்புற இடங்ககளை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.
சுத்தமான தண்ணீர் எப்போது கிடைக்கும்?
அதிகரித்து வரும் தண்ணீர் பிரச்சனையால் மக்களின் வாழ்வில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் தண்ணீர் கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஆனால் கிடைக்கும் அந்த கொஞ்சம் நீரும் சுத்தமானதா? மஞ்சள் நிறத்திலும், அசுத்தமாக, அதன் வாசனை குடலை புரட்டும் வகையில் அசுத்தமான தண்ணீரை பயன்படுத்தும் நிலையில் இன்றைக்கு மக்கள் உள்ளனர்.
அதே நேரத்தில் வணிக நோக்கத்தில் தண்ணீர் வழங்கும் நிறுவனங்கள் மக்களின் நலனை கருதாமல் தண்ணீர் வழங்கினால் போதும் அது எப்படி இருந்தால் என்ன, சுத்தமானதா, உடல் நலனை பாதிக்கும்? என்று அறம் காப்பதில்லை. அலட்சியமாக வழங்கும் தண்ணீர் ஏற்படுத்தும் விளைவு நோய்களும், மரணமும். இதில் அதிகமாக பலியாவது குழந்தைகளே.
வரிசைகட்டி நிற்கும் நோய்கள்
தண்ணீருக்கான அலைச்சல் ஒரு பக்கம் இருந்தாலும், அதனை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் வயிற்றுப்போக்கு, காலரா, வாந்தி, பேதி, இரைப்பைப்புண், டைபாய்டு, மஞ்சள் காமாலை, குடல் புழுத் தொல்லை, எலிக்காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் வரிசையில் நிற்கின்றன.
அரசாங்கம் என்ன செய்யப்போகிறது?
மக்களுக்கு தண்ணீர் சுத்தமானதா வழங்கப்படுகிறதா என்று மாநகராட்சி மூலமும், தனியாராலும் அரசு உறுதி செய்ய வேண்டும் என உலக சுகாதாரத் துறை கூறியுள்ளது. இதை நம் அரசாங்கம் கடை பிடித்து மக்களுக்கு தூய்மையான தண்ணீர் வழங்குமா? வரிசைகட்டி நிற்கும் நோய்கள் மக்களை மரண படுக்கையில் தள்ளுவதை அரசாங்கம் தடுக்குமா? பதில் எப்போது கிடைக்கும்...................காத்திருக்கும் மக்கள்......
K.Sakthipriya
Krishi Jagran
Share your comments