1. வாழ்வும் நலமும்

Weight Loss Tips: உடல் எடையைக் குறைக்க சில டிப்ஸ் இதோ!

T. Vigneshwaran
T. Vigneshwaran

Weight Loss Tips

Weight Loss Tips: ஆரோக்கியத்திற்கான கேடு, உங்கள் எடையை அதிகரிப்பதன் மூலம் தொடங்குகிறது. உங்கள் உடல் எடை அதிகரித்தால், உங்கள் வாழ்க்கை முறை மோசமாகிவிடும் என்று அர்த்தம். இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதயம் மற்றும் சிறுநீரக நோய்கள் ஆகியவை உடல் பருமனுடன் தொடர்புடையவை. உங்கள் உடல் பருமனுக்கான முக்கிய காரணம் சில கெட்ட பழக்கவழக்கங்களாகும்.  இதன் காரணமாக உங்கள் உடலின் செயல்பாட்டை பாதிக்கும் உடல்  பருமனுக்கான சில கெட்ட பழக்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

பின்வரும் பழக்கவழக்கங்களில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை நீங்கள் கடைபிடித்தால், அவற்றை உடனடியாக மாற்றிக் கொள்ளவும். இல்லையென்றால் உங்கள் உடல்நிலை பாதிக்கப்படலாம்.

 

தூக்கமின்மை

NCBI மற்றும் Harvard  நடத்திய பல ஆராய்ச்சிகளில் போதுமான தூக்கம் இல்லாத நிலையில் உடல் பருமன் பிரச்சினைக்கு வழிவகுக்கிறது என்பது தெரிய வந்துள்ளது. தூக்கமின்மை காரணமாக, உடலில் குளுக்கோஸ் உணர்திறன் மற்றும் இன்சுலின் உணர்திறன் குறைந்து கார்டிசோல், கிரெலின், லெப்டின், பசி போன்றவை அதிகரிக்கும் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

குறைவான உடல் இயக்கம்

உடல் பருமனுக்கும் கலோரி உட்கொள்ளலுக்கும் இடையே நேரடி தொடர்பு இருக்கிறது. உங்கள் உணவில் அதிக கலோரிகள் இருந்தால், அவற்றை எரிக்க போதுமான அளவிற்கு உங்கள் உடல் செயல்பாடு இல்லாமல் இருப்பதால், உங்கள் உடல் பருமன் அதிகரிக்கும். தேவையானதை விட அதிக கலோரிகளை உட்கொள்வதன் மூலம், கொழுப்பு உடலில் தேங்கி கொள்கின்றன,  உடல் பருமன் அதிகரிக்கின்றன. இதனுடன், குறைவான உடல் செயல்பாடு காரணமாக கழுத்து வலி மூட்டுவலி போன்ற பிற பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.

இரவு உணவு தாமதமாகுதல்

தாமதமாக இரவு உணவு சாப்பிட்டு, உடனேயே தூங்க செல்பவர்களுக்கு, உடல் பருமன் மற்றும் வயிற்றுப் பிரச்சனைகள் எளிதில் வரக்கூடியது. ஏனெனில், தூக்கத்தில் செரிமான சக்தி மிகவும் குறைவாக இருக்கும் என்பதால், நம் வயிற்றில் உள்ள உணவு,  சரியாக செரிமானம் ஆகாமல், அதன் காரணமாக வாயு, அஜீரணம், வயிற்று வலி, மலச்சிக்கல் ஆகியவற்றுடன் உடல் பருமன் பிரச்சினையும் அதிகமாக வருகிறது.

ஆரோக்கியத்திற்கான நல்ல பழக்கங்கள் எவை?

  •  தினமும் 8 முதல் 9 மணி நேரம் தூக்கம் அவசியம்.
  • தினமும் அரை மணி நேரம் உடல் பயிற்சி செய்ய வேண்டும். குறைந்தபட்சம் நடைபயிற்சி போன்றவற்றை செய்ய வேண்டும்.
  • ஒவ்வொரு நாளும் தூங்குவதற்கு 2 முதல் 3 மணி நேரம் முன்பாக இரவு உணவு சாப்பிட வேண்டும்.
  • பழங்கள், பழச்சாறுகள், நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை காலை உணவில் எடுத்துக் கொண்டால் நல்லது.

மேலும் படிக்க:

ஆரோக்கியமான பால் எது? சுட வைத்ததா அல்லது வைக்காததா?

சிறுநீரக கல் பிரச்சனைகளுக்கு! தவிர்க்க வேண்டிய உணவுகள்!

English Summary: Weight Loss Tips: Here are some tips to lose weight!

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.