1. வாழ்வும் நலமும்

வெள்ளைக் காய்கறிகளை சாப்பிடுவதால் என்ன ஆரோக்கிய நன்மைகள்?

Ravi Raj
Ravi Raj
Health Benefits of Eating more White Vegetables..

முதலில் நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். பெரும்பாலான மக்கள் சரியான நேரத்தில் சாப்பிடுகிறார்கள் எனக் கூறுவது கடினமாகும். ஆனால் அரோக்கியமான சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ளாததால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்தியர்கள் உப்பு மற்றும் நொறுக்குத் தீனி அதிகம் எடுத்துக்கொள்வதாக பொதுவாக நம்பப்படுகிறது.

ஆரோக்கிய உணவு முறை:

நாம் உண்ணும் அனைத்து உணவுகளுமே ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக இருப்பதில்லை. ஆனால் முடிந்தவரையில் உணவின் பெரும்பான்மையான பகுதி ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

குறிப்பாக உங்கள் உணவில் நிறைய காய்கறிகள் இருப்பது மிகவும் முக்கியமாகும். குறிப்பாகஇயற்கையாகவே பல வண்ணங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களை நம்முடைய உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வெள்ளை நிற காய்கறிகள்:

வெவ்வேறு நிறமுள்ள காய்கறிகளின் சத்துக்கள் அவற்றின் நிறமியைப் பொறுத்து மாறுபடும். அதனால்தான் வெவ்வேறு வண்ணங்களில் காய்கறிகளை எடுத்துக்கொள்வது நல்லது.

எனவே நாம் உண்ணும் காய்கறிகளில் வெள்ளைக் காய்கறிகளை அதிகம் உட்கொள்வதால் என்ன வகையான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.

பூண்டு:

பூண்டு ஒரு உணவுப் பொருள் மட்டுமல்லஅது ஒரு மூலிகை தன்மையும் கொண்டவையாகும். பூண்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது.

இதில் உள்ள அல்லிசின் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த அல்லிசின் நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.

காலையில் வெறும் வயிற்றில் ஒரு பல் பூண்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கொழுப்புகள் வேகமாக கரைந்து, உடல் எடையையும் குறைக்கும். இது தவிர தினசரி உணவில் பூண்டை சேர்த்துக் கொள்வது நன்மை பயக்கும். பூண்டை உணவில் அதிகம் சேர்க்காதவர்கள், பூண்டு டீ செய்து குடிக்கலாம்.

காளான்:

உலகம் முழுவதும் பல்வேறு வகையான காளான்கள் கிடைக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஆண்டு முழுவதும் உற்பத்தி செய்யக்கூடிய காளான் வகைகளாகும். உண்ணக்கூடிய காளான்கள் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் இருக்கும்.

காளான் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளில் மிக முக்கியமானதுகாளானில் குறைந்த கொழுப்பு மற்றும் காளான்களில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் உள்ளது, என்பதாகும்.

இது குறிப்பாக வைட்டமின் டிபொட்டாசியம்செலினியம் மற்றும் நியாசின் ஆகியவற்றில் நிறைந்துள்ளது. எனவே காளானை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

காலிஃபிளவர்:

காலிஃபிளவர் பலருக்கு மிகவும் பிடித்த காய்கறிகளில் ஒன்றாகும். இந்த நாட்டு வெள்ளை பூ போன்ற சுவை மட்டுமல்லஇது எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. 

காலிஃபிளவரில் கந்தகம் என்கிற (Sulphur) அதிகம் உள்ளது. இது கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எலும்புகளை வலுப்படுத்தவும்புற்றுநோய் செல்களை தாக்கவும் அழிக்கவும் உதவுகிறது.

இதில் அதிக அளவில் புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிக்கும் பண்பு காலிஃபிளவருக்கு அதிகமாக இருக்கிறது.

உருளைக்கிழங்கு:

உருளைக்கிழங்கு வெளியில் பிரவுன், ஆனால் உள்ளே வெண்மையாக இருக்கும். உருளைக்கிழங்கு ஒரு ஆரோக்கியமற்ற காய்கறி என்று பலர் நினைக்கிறார்கள்.

இதில் ஸ்டார்ச் மற்றும் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. அது உடல் எடையை அதிகரிக்கும் என்று நினைக்கிறோம். அது ஓரளவு உண்மையாக இருந்தாலும், அதிலும் பல நன்மைகள் ஒளிந்திருக்கிறது.

ஆகவே இதனை, அளவாக எடுத்துக்கொள்ளலாம். இதில் பொட்டாசியம்நார்ச்சத்துமெக்னீசியம் மற்றும் வைட்டமின் பிஅதிகம் உள்ளது.

மேலும் படிக்க..

வெள்ளைப் பூண்டு – அறுவடை பின்செய் நேர்த்தி

கோழிகளைத் தாக்கும் வெள்ளைக் கழிச்சல் நோய்- நிவாரணம் தரும் இயற்கை மருந்துவம்!

English Summary: What are the health benefits of eating more white vegetables? Published on: 27 April 2022, 04:55 IST

Like this article?

Hey! I am Ravi Raj. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.