தற்போதைய கால கட்டத்தில் எல்லாம் கணினி மயம் ஆக்கப்பட்டுள்ளது. இதனால் நாம் செய்யும் வேலைகளும் கணினி சம்பந்தப்பட்ட வேலைகள் தான். நீண்ட நேரம் கணினியிலயே உட்கார்ந்து இருப்பது, வேலையில் ஏற்படும் மன அழுத்தம் இவைகள் காரணமாக நிறைய மக்கள் தலைவலி பிரச்சனையை சந்திக்கின்றனர். இந்த தலைவலி பிரச்சனை எல்லாருக்கும் ஒன்றாக இருப்பதில்லை. அவை வரும் இடங்களுக்கு பொருத்து இதன் தன்மையும் சிகச்சை முறைகளும் மாறுபடுகின்றன.
உங்களுக்கு ஒன்று தெரியுமா தலைவலியில் நான்கு வகைகள் உள்ளன. இங்கு அந்த நான்கு வகை தலைவலிகள் குறித்து பேசுவோம்.
டென்சன் தலைவலி (Tension Headache)
சிலருக்கு டென்ஷன் வந்தாலே தலை வலிக்க ஆரம்பித்து விடும் அவை லேசான வலியை ஏற்படுத்துகின்றன, இதை டென்ஷன் அதாவது பதற்ற தலைவலி என்கின்றனர். இந்த தலைவலி வெடுக் வெடுக்கென்று துடிப்பதில்லை. ஆனால் தலையைச் சுற்றி வலிக்க ஆரம்பித்து விடும். அப்படியே தலையை போட்டு அமுக்குவது போன்று தோன்றும். மன அழுத்தம் இருப்பவர்கள் இந்த தலைவலி பிரச்சனையை சந்திக்கின்றனர். இந்த தலைவலிக்கு நீங்கள் மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் நேரடியாக OTC மருந்துகளை வாங்கி பயன்படுத்த முடியும். ஆனால் இந்த தலைவலி நாள்பட்டு நீடித்தால் மருத்துவரை அணுகி வாருங்கள்..
ஒற்றைத் தலைவலி (Migraine)
ஒற்றைத் தலைவலி என்பது தலையின் ஒரு பக்கம் மட்டும் தாங்க முடியாத அளவில் வரும். ஒற்றைத் தலைவலி வந்தால் சாமான்யமாக போகாது. அது பல நாட்களுக்கு நீடிக்கும். தலைவலி ஒரு பக்கமாக இருக்கும். வெடுக்கு வெடுக்கு என்று துடிக்கும். வெளிச்சத்தை பார்க்கும் போதும் சத்தத்தை கேட்கும் போதும் எரிச்சலாக இருக்கும். ஏன் பல நேரங்களில் இந்த ஒற்றைத் தலைவலியால் வாந்தி, குமட்டல் ஏற்படலாம்.
ஆண்களை விட பெண்களுக்குத் தான் இந்த ஒற்றைத் தலைவலி அதிகமாக அடிக்கடி வருகிறது. ஆண்களை விட பெண்களுக்கு மூன்று மடங்கு ஒற்றைத் தலைவலி வர வாய்ப்புள்ளது. அதிலும் இதற்கு முக்கிய காரணமாக மன அழுத்தம் உள்ளது. யாருக்கெல்லாம் மன அழுத்தம் அதிகமாக இருக்கிறார்களோ அவர்கள் இந்த ஒற்றைத் தலைவலியால் பாதிப்படைகின்றனர். இந்த ஒற்றைத் தலைவலி வர இன்னும் சில காரணங்கள் இருக்கின்றன. சரியாக தூங்காமல் இருப்பது, நேரத்திற்கு நேரம் உணவு சாப்பிடாமல் இருப்பது, போதிய நீர்ச்சத்துயின்மை, ஹார்மோன் சமநிலையின்மை, அலற்சி போன்ற காரணங்களும் இந்த ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்துகின்றன.
சைனஸ் தலைவலி (Sinus headache)
இந்த தலைவலி பொதுவாக நமக்கு சளி பிடித்த சமயங்களில் ஏற்படும். மண்டையில், சுவாச பாதையில் தேங்கி நிற்கும் சளியால் இந்த தலைவலி ஏற்படுகிறது. கண்கள், கன்னங்களில், பற்களில் அழுத்தத்தை உணர்வீர்கள். முக வலி இதன் அறிகுறியாகும். சில நேரங்களில் மூக்கடைப்பால் வாசனை இல்லாமல் போகும்.
கிளஸ்டர் தலைவலி Cluster headache)
இந்த தலைவலி கண்களுக்கு பின்னால் பகுதியில் ஏற்படுகிறது. ஒரு நேரத்தில் ஒரு கண்ணுக்கு பின்னால் வலியை ஏற்படுத்தும். வீக்கம், கண்கள் சிவந்து போதல், வியர்த்தல் இவற்றுடன் கண்கள் எரியும், வலி கடுமையாக இருக்கும். மூக்கடைப்பு, கண்களில் இருந்து கண்ணீர் வருதல் போன்ற அறிகுறிகளும் தென்படும். இந்த தலைவலி 15 நிமிடங்கள் இருந்து 3 மணி நேரம் வரை நீடிக்க கூடியது. சில நேரங்களில் ஒரு நாளைக்கு 4 தலைவலி வரைக் கூட உணர முடியும்.
வசந்த காலத்தில் இந்த தலைவலியை உணருவார்கள். பெண்களை விட ஆண்கள் இந்த தலைவலியால் அதிகம் பாதிப்படைகின்றனர். இந்த தலைவலிக்கு டாக்டரிடம் சென்று சிகி்ச்சை பெறுவதே சிறந்தது.
Share your comments