கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி வருவதால், வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாணவர்கள், வீட்டில் இருந்து பாடம் கற்கின்றனர். பணியில்லாதவர்களின் பொழுதுபோக்கு, டிவி பார்ப்பதாகவும், அலைபேசியில் காலம் கழிப்பதாகவும் இருக்கிறது.
தொற்று காலத்தில், வீட்டை விட்டு தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்று அரசு அறிவுறுத்துகிறது. அதனால் தான், வீட்டிலேயே பணிபுரியும் மக்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதேசமயம், வீட்டிலேயே முடங்கிக் கிடந்தால், மன அழுத்தங்களுடன் உடல் கோளாறுகளும் ஏற்படுகின்றன.
துாக்கமின்மை
வீட்டில் இருப்பவர்கள் பலர், பகல் நேரங்களிலேயே துாங்கிக்கழிப்பதால், இரவில் துாக்கம் வராமல் அவதியுறுகின்றனர். தொற்று காலத்தில் துாக்கமின்மை என்பது, பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. இது பற்றி சுகாதாரத் துறையினர் கூறியதாவது: பலரும், ஆழ்ந்து உறங்குவதில்லை. குறட்டை விட்டால் ஆழ்ந்த உறக்கம் என்று பலர் தவறாக கருதுகின்றனர். நுரையீரலுக்கு காற்று செல்லும் வழிகள் அடைபடுவதால் தான் குறட்டை எழுகிறது. வாய் வழியாக மூச்சுவிடுவதே குறட்டையாக எதிரொலிக்கிறது. இதுவே, நாளடைவில் பல்வேறு நோய்கள் வருவதற்கு அடிகோலுகிறது.
அதிக எடை உள்ளவர்கள், கொழுப்புச்சத்து (Fat) அதிகம் உள்ளவர்கள் மூச்சுத்திணறலால் பாதிக்கப்படுகின்றனர். ஏழு அல்லது எட்டு மணி நேரம் வீட்டிலேயே அமர்ந்து பணிபுரிகிறவர்கள், உடல் இயக்கம் என்பதையே மறந்துவிடுகின்றனர். கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது. மூச்சுக்குழல்களின் பாதையில் கொழுப்பு படிகிறது.
ஒரே இடத்தில் அமர்ந்து பணிபுரிபவர்கள், நொறுக்குத்தீனி சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தால், விரைவிலேயே நோய்களுக்கு ஆட்பட்டு விடுகின்றனர். உடற்பயிற்சிக்கு (Excercise) போதுமான முக்கியத்துவம் தர வேண்டும். இதன் மூலம், தேவையற்ற கொழுப்பு அகன்றுவிடும். குறைந்தபட்சம், தினமும் காலையிலும் மாலையிலும் தலா அரை மணி நேரம் நடைப்பயிற்சி (Walking) செய்வது சிறந்தது.
மேலும், வீட்டில் இருந்தபடி அலுவலகப் பணிகளை மேற்கொள்ளும் நடைமுறையால், முதுகுத் தண்டு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு (Curfew) அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, ஐ.டி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே அலுவலகப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தின.
தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு வந்தாலும் கூட, கொரோனா அச்சத்தால் இந்த நடைமுறையையே பல நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன.
மனித குலத்திற்கு ரெட் அலர்ட் விடுத்தது ஐபிசிசி: பூமியின் வெப்பநிலை உயரும் அபாயம்!
எலும்பு நோய்
அலுவலகப் பணி நிமித்தமாகவும், ஆன்லைன் வகுப்புகளுக்காகவும் பல மணி நேரம் ஒரே இடத்தில் அமர வேண்டியுள்ளது. இது, முதுகுத்தண்டு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தும் என எலும்பு நோய் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இதுகுறித்து, புனேவைச் சேர்ந்த டாக்டர் நிராலி மேத்தா கூறியதாவது: கொரோனா வைரஸ் பரவலால் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், வீட்டில் இருந்தபடியே அலுவலகப் பணிகளையும் பெரும்பாலானோர் செய்து வருகின்றனர். இதனால், உடல் இயக்கம் முற்றிலுமாக பாதிக்கப்படுகிறது. அத்துடன், ஒரே இடத்தில் அமர்ந்து பணிபுரிவதால் பலருக்கு முதுகு வலி ஏற்படுவது அதிகரித்துள்ளது.
முறையான இருக்கைகளை பயன்படுத்தாமல் இருப்பது, கூன் போட்டு அமர்ந்திருப்பது, சிறிதளவு கூட உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளாமல் இருப்பது ஆகிய காரணங்களால் முதுகுத் தண்டு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. வலி ஆரம்பிக்கும் போதே, மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டால், இதனை எளிதில் சரிசெய்து விடலாம்.
மேலும் படிக்க
கண்கள் இரண்டும் சோர்வடையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
வியக்க வைக்கும் வேப்பம்பூவின் அரிய பயன்கள்!
Share your comments