1. வாழ்வும் நலமும்

கருணைக்கிழங்குகளில் இவ்வளவு நன்மை இருக்கிறதா!!!

KJ Staff
KJ Staff

கருணைகிழங்கு சாப்பிடுவதால் குணமாகும் பல பிரச்சனைகள். பித்தம், செரிமானமின்மை, புற்று நோய், உடல் எடை குறைய, மூலம், மாதவிடாய் பிரச்சனைகள் போன்று உடலில் ஏற்படும் பல வகை நோய்களை குணமாக்கும்.

பித்தம்

தலைவலி, மயக்கம்  போன்ற பிரச்சனைகள் உடலில் பித்தம்  இருக்கும் சமயத்தில் ஏற்படும். பித்தம் அதிகரிக்கும் பட்சத்தில் அடிக்கடி உடலில் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.அப்போது கருணை கிழங்கிற்கு பித்தத்தின் அளவை சமசீராக செய்யும் தன்மை அதிகமுள்ளது. எனவே பித்தம் சம்பந்தமான பிரச்சனைகள் கொண்டவர்கள் கருணை கிழங்கை அடிக்கடி தங்களது உணவில் சேர்த்துக் கொண்டால் பித்தம் கட்டுப்படும்.மேலும் நமது உடலில் பித்த கற்கள் உருவாவதை தடுக்கலாம்.

செரிமானமின்மை

சிலருக்கு சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் ஆகா நிலை ஏற்படுகிறது.கருணைக் கிழங்கு அதிகமாக உணவில் சேர்த்துக் கொண்டால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்.ஜீரண மண்டலம் சிறப்பாகச் செயல்பட உதவும். செரிமானக் கோளாறுகளுடன் மலச்சிக்கல், வாயு சேர்த்தல் மற்றும் இதர வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் திறன் கொண்ட இயற்கை உணவாக கருணை கிழங்கு இருக்கிறது.பெருங்குடல் மற்றும் உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்துக்கு உறுதுணையாக இருக்கும் வல்லமை கருணைக் கிழங்கிற்கு உண்டு.

எலும்புகள்

எலும்புகள் என்பது நமது உடலுக்கு அடிப்படையாக இருப்பது.  மனிதர்களுக்கு எலும்புகள் வலிமையாக இருக்க கால்சியம் சத்து அவசியம் ஆகும். கருணை கிழங்கு எலும்புகளை வலிமையாக்கும் சக்தியை கொண்டுள்ளது. குழந்தைகள், வயதானவர்களுக்கு எலும்புகள் வலு குறைவாக காணப்படும்.  கருணை கிழங்கை வாரம் ஒரு முறை சாப்பிட்டால் எலும்புகள் வலிமை பெறும்.

புற்று நோய்

உலகெங்கிலும் ஏற்படும் புற்றுநோய்களில் இன்று வயிறு மற்றும் இரைப்பை சம்மந்தமான புற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே காணப்படுகிறது. கருணை கிழங்கு பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கும் கழிவுகளை வெளியேற்றி புற்று செல்கள் வளராமல் தடுக்கிறது. எனவே வயிறு, இரைப்பை புற்று ஏற்படாமல் தடுக்க உணவில் கருணைக்கிழங்கு அதிகம் சேர்த்து சாப்பிட வேண்டும்.

உடல் எடை குறைய

தொடர்ந்து கருணைக்கிழங்கு சாப்பிட்டு வந்தால் உடலுக்கு அதிக சக்தி கிடைக்கும். புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, பீட்டாகரோட்டின், நியாசின் போன்ற சத்துக்கள் அதிகம்  இருக்கின்றன.சிறுநீரக நோயாளிகள் இதனை சாப்பிடக்கூடாது. சர்க்கரை நோயாளிகள் குறைந்த அளவில் உட்கொள்ளவேண்டும். அதீத உடல் எடை கூடுவது உடல் நலத்திற்கு பல பாதிப்புகளை உண்டாக்கும்.அதனால் சரியான ஆரோக்கியமான உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.மாவுச்சத்தும், பொட்டாசியமும் இதில் அதிகம் இருக்கிறது.இதனால் உடல் எடை உறுதியாக குறையும்.

மூலம்

தினமும் ஒரு வேளை கருணை கிழங்கு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் மூலம் காரணமாக குடலில் ஆசனவாயில் ஏற்பட்டிருக்கும் புண்களை விரைவில் ஆற்றுகிறது. காரல் தன்மையால் நாக்கில் ஏற்படும் நமைச்சல் ஆகியவற்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நிறைய பேருக்குப் பிடிக்காது. ஆனால் மூல நோய் போன்ற அதிக சிரமங்களை ஏற்படுத்தும் நிறைய பிரச்சினைகளுக்கு இந்த கருணைக் கிழங்கு மிகச் சிறந்த தீர்வாக அமையும் என்பது தெரிவதில்லை.

மாதவிடாய் பிரச்சனைகள்

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் தொடை, இடுப்பு மற்றும் உடல் வலியைப் போக்கும் ஆற்றல் கொண்டது.இக்காலத்தில் பெண்கள் பலருக்கு ரத்த போக்கு அதிகம் ஏற்பட்டு பெண்களை உடலளவிலும் மனதளவிலும் களைப்படைத்து உடல் சத்து இழப்பு மற்றும் சோர்வு ஏற்படுகிறது. மாதவிடாயின் போது கருணைக் கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க:

உடலுக்கு நஞ்சாகும் காய்கறிகள் - மக்களே உஷார்!

உளுந்தி ன் மருத்துவப் பயன்கள் - அறிந்து கொள்வோம்

தினமும் பேரீச்சை பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

 

English Summary: Wow....Is There so much benefit in Elephant Yam!!!

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.