தருமபுரி மாவட்ட விவசாயிகள் விதை உற்பத்தி செய்ய முன்வருமான மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்ருப்பதாவது:
-
தர்மபுரி மாவட்டத்தில், பல்வேறு காய்கறிகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இதில், சான்றளிக்கபட்ட உண்மை நிலை விதை உற்பத்தி செய்யும் விவசாயிகள் மற்றும் தோட்டக்கலை தொழில் முனைவோர் மூலம், 61 ஹெக்டேரில், 23 டன் காய்கறி விதைகள் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
-
இத்திட்டத்தின் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட விதைகள், தோட்டக்கலை தொழில் முனைவோர்களுக்கு, வெங்காயம், முருங்கை, காய்கறி, காராமணி, கொத்தவரை, பாகல், புடலங்காய், பீர்க்கங்காய், பூசணி உள்ளிட்ட காய்கறி பயிர்களின் விதைகளை உற்பத்தி செய்வதற்கு, விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
-
குறைந்தபட்சம், 0.2 ஹெக்டேர் முதல், இரண்டு ஹெக்டர் வரை உறுதி செய்யப்பட்ட நீர்பாசன வசதியுடன் கூடிய நிலம் கொண்ட விவசாயிகள், இந்த விதை உற்பத்தி செய்ய தகுதி பெற்றவர்களாகும்.
-
இத்திட்டம் குறித்த, மேலும் விபரங்களுக்கு, தர்மபுரி மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அல்லது அந்தந்த தாலுகாவில் உள்ள, தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் அணுகலாம்.
-
உழவன் செயலியிலிலும், விதை உற்பத்தி குறித்து பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
Share your comments