1. தோட்டக்கலை

குட்பை சொல்லும் குப்பைகள்- உரமாகும் அதிசயம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Goodbye rubbish- compost miracle!

நம் மாடித் தோட்டத்து பயிர் வளர உரங்கள் மிக மிக அவசியம். ஆனால் அந்த உரங்களை நாம் காசு கொடுத்துதான் வாங்க வேண்டும் என்பதில்லை. நம் சமையலறைக் கழிவுகளையும், குப்பையைக்கூட நம்மால் உரமாக மாற்ற முடியும். தெரிந்துகொள்ள உள்ளே படியுங்கள்.

உங்கள் சமையலறைக் குப்பையில் சிலப் பொருட்களைக் கொண்டு, பயிர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து அளிக்கக்கூடிய உரங்களை எளிதில் தயாரிக்கலாம். அவை எவை என்று எண்ணுகிறீர்களா? இதோ பட்டியல்.

முட்டை ஓடுகள் (Egg Shells)

நாம் பயன்படுத்திவிட்டு வீசும் முட்டை ஓடுகளில், தாவரங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் 90% உள்ளன. இதில் கால்சியம் கார்பனேட் மட்டும் 30 சதவீத அளவுக்கு உள்ளது. இதுத்தவிர மெக்னீசியம், பாஸ்பரஸ், புரதச் சத்து உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன.

ஆரஞ்சு, வாழைப்பழத் தோல்கள் (Fruit peels of orange or banana)

இந்த தோல்கள் இயற்கையான உரமாக செயல்பட்டு பயிரின் வளர்ச்சிக்கு வித்திடுகின்றன. எனவே இதனை குப்பைத் தொட்டியில் போடாமல், ஒரு தொட்டியில் போட்டு மட்க வைத்து, பயிர்களுக்குப் பயன்படுத்தலாம்.

எலுமிச்சைத் தோல் (Citrus peels)

எலுமிச்சைப்பழத்தின் தோல் மட்டுமல்ல, அதில் உள்ள கொட்டைகளையும் சேகரித்து, அதாவது சிறிய ஓட்டை போட்டு சாறை எடுத்தபின்பு, எஞ்சியதை சேர்த்துவைத்துக் கொள்ளுங்கள். இதனை மட்க வைத்து மாடித்தோட்டத்தில் செடிகளுக்குப் பயன்படுத்தலாம்.

அரிசி கழுவும் தண்ணீர் (Old water or milk bottle or jug)

சமைக்கப் பயன்படுத்தும் பொருட்கள் குறிப்பாக அரிசி, காய்கறிகள், ஆகியவற்றுடன், பால் காய்ச்சிய பாத்திரத்தைக் கழுவப் பயன்படுத்தும் தண்ணீர் ஆகியவற்றை, பழைய பாட்டில்களின் ஊற்றி சேகரித்து, இயற்கை உரமாகப் பயன்படுத்தலாம். இதேபோல் கஞ்சித்தண்ணீரையும் உபயோகிக்கலாம்.

வேகவைக்கும் தண்ணீர் (Cooking water)

காய்கறிகள், முட்டை போன்றவற்றை வேகவைக்கும் தண்ணீரையும் கீழே ஊற்றத் தேவையில்லை. அதனையும் ஆறவைத்து பயிர்களுக்குப் பயன்படுத்தலாம். இதில் உள்ள ஏராளமான ஊட்டச்சத்துக்களை தாரவங்களுக்கு பயன்களை அளிக்கின்றன.

காஃபித்தூள் கப்பி

காஃபித்தூளை வடிகட்டினால் கிடைக்கும் கப்பியை, மண்தொட்டியில் மண்ணைப் போடுவதற்கு முன்பு அடியில் போடவேண்டும். அத்துடன் தொட்டியின் அடியில் சிறிய துளை போட்டுவிட்டால் இந்தக் காபித்தூள் கழிவுகளை மண்ணிற்குள் தங்க விடாது. உடனுக்குடன் அந்த சிறிய துளை வழியாக வெளியேற்றிவிடும்.

மிளகாய் விதைகள் (Chili Leftovers)

சமையலுக்கு பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் மிளகாய் மற்றும் அதன் விதைகளைக்கூட மிக்ஸில் (Mixi)போட்டு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். இதனை செடிகளுக்கு ஊற்றுவதால், பூச்சி மற்றும் புழுக்கள் அண்டவே அண்டாது.
எனவே இனிமேல் இந்த குப்பைகளை நாமும் உரமாக மாற்றி நிலத்தைப் பாதுகாப்போம்.

மேலும் படிக்க...

தமிழகத்தில் விவசாயத்திற்கான இலவச மின்வினியோக நேரம் மாற்றம்!

விவசாயிகளுக்கு விரைவில் கரும்பு நிலுவைத் தொகை -அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி!

உயர் மதிப்பு காடுகளை உருவாக்க முயற்சி மேற்கொண்டுள்ள TNAU!

English Summary: Goodbye rubbish- compost miracle! Published on: 10 November 2020, 08:41 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.