மத்திய அரசின் சார்பிலும், மாநில அரசின் சார்பிலும் தொடர்ந்து விவசாயத்திற்கென பல்வேறு மானியத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தோட்டக்கலையில் மானியம் வழங்கப்பட இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்த தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.
தோட்டக்கலையில் மானியம் வழங்கப்படுவது தொடர்பாக கோவை துணை இயக்குநர் ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இது கோவை பகுதியைச் சார்ந்த விவசாயிகளுக்குப் பெரிதும் பலன் கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதன் விரிவான தகவல்கள் இப்பதிவில் பின்வரும் பத்திகளில் கொடுக்கப்படுகின்றன.
மேலும் படிக்க: மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு!
கோவை தோட்டக்கலை துணை இயக்குநர் புவனேஸ்வரி வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், 2022-23ஆம் நிதியாண்டில் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களிலும் இணையதளம் வழியாகப் பதிவு செய்த விவசாயிகளுக்கே மானியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காகப் பதிவு செய்ய வேண்டிய இணையதள முகவரி tnhorticulture.tn.gov.in/tnhortnet எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்: HRA உயர்கிறது!
இந்த இணைதள முகவரியில் முறைப்படி பதிவு செய்து விவசாயிகள் பயன் அடையலாம் எனக் கூறப்பட்டுள்ளது. தாங்களாகப் பதிவு செய்ய தெரியாத மற்றும் இயலாத விவசாயிகள் அவரவர் வட்டாரத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தினை அணுகிப் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: DA Hike: அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்ந்தது!!
தேவையான ஆவணங்கள் மற்றும் விவரங்கள்
- ஆதார் எண்
- விவசாயி பெயர்
- கைபேசி எண்
- மாவட்டம்
- வட்டம்
- கிராமம்
- வீட்டு முகவரி
- அஞ்சல் குறியீடு
மேலும் படிக்க: கோழி வளர்ப்புக்குக் கடன் வழங்கும் வங்கிகள்! இன்றே பதிவு செய்யுங்கள்!!
செயல்படுத்தப்படும் திட்டங்கள்
- தேசிய தோட்டக்கலை இயக்கம் (NHM)
- தேசிய விவசாய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் (NADP)
- நிலையான விவசாயத்திற்கான தேசிய இயக்கத்தின் கீழ் மானாவாரி பரப்பு மேம்பாடு (RAD
- ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டம் (IHDS)
- தேசிய மூங்கில் இயக்கம் (NBM)
- தேசிய ஆயுஷ் இயக்கம் (NAM)
- தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் (TNIAMP) முதலான திட்டங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் படிக்க: அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை! புதிய விலை நிலவரம்!
செயல்முறை
- இவற்றில் விவசாயியகள் தங்களுக்கு உரிய திட்டத்தைத் தேர்வு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- திட்ட இனம், உப இனம், முன்மொழியப்பட்ட பயிர், தேவையான அளவு (சாகுபடி பரப்பு) ஆகியனவற்றைப் பூர்த்திச் செய்தல் வேண்டும்.
- விண்ணப்பத்தின் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்து Submit செய்தல் வேண்டும்.
- அடுத்ததாக, பதிவு தொடர்பான எஸ்.எம்.எஸ் மொபைல் எண்ணிற்கு வரும்.
- அடுத்த சில வாரங்களில் மானியம் கிடைப்பதற்கான வழிமுறைகள் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
Share your comments