ஈரோடு மாவட்ட விவசாயிகளுள் மற்றும் தொழில்முனைவோர்களுக்காக இயற்கை வழி விவசாயம் பற்றிய இணையவழி பயிற்சி இன்று நடைபெறுகிறது. இதில் அனைத்து விவசாயிகளும் பங்கேற்றுப் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
விவசாயத்தின் ஆணிவேர் (The root of agriculture)
விவசாயத்தைப் பொறுத்தவரை இயற்கை விவசாயம் என்பதுதான் பல ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவின் விவசாயமாக இருந்தது. ஆனால், காலப்போக்கில், வணிக ரீதியிலான புரட்சி ஏற்பட்டபோது, குறைந்த காலத்தில் பெரும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றப் பேராசை கோலோட்சியதால்தான், மண்ணும், மனிதர்களும் தங்கள் ஆரோக்கியத்தை இழக்க நேர்ந்தது.
ஆரோக்கியம் தரும் (Gives health)
இதையடுத்து ஆரோக்கியம் என்ற கவசத்தைக் காப்பாற்றுவதற்காக உருவெடுத்ததுதான் இயற்கை விவசாயம். இருப்பினும் பல்வேறு சவால்கள் நிறைந்த இயற்கை விவசாயம்தான் இந்தியாவின் எதிர்காலம் என்பதை நாம் அனைவருமே உணரத் தொடங்கியுள்ளோம்.
இணையவழிப் பயிற்சி (Online training)
இதனைக் கருத்தில்கொண்டு,இயற்கை வழி விவசாயம் பற்றிய இணையவழிப் பயிற்சி, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள MYRADA வேளாண் அறிவியல் நிலையத்தில் இன்று நடைபெறுகிறது. இந்தப் பயிற்சியில், அனைத்து விவசாயிகளும் இணையதளம் மூலம் கலந்துகொள்ளலாம்.
துவக்க உரை (Introduction)
MYRADA வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவர் மற்றும் முதுநிலை விஞ்ஞானியுமான முனைவர் பி. அழகேசன் துவக்க உரையாற்றுகிறார்.
நடைபெறும் நாள் (The day of the event)
இன்று(ஜூன் 24)
பயிற்சி நேரம் (Training time)
காலை 11 மணி முதல் பகல்1.00 மணி வரை
முன்னோடி விவசாயிகள் (Topics discussed)
இந்தப் பயிற்சியில் பல ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தில் தங்களை நிலைநிறுத்திக்கொண்டுள்ள முன்னோடி விவசாயிகள் திரு. ஆர். செல்வம் மற்றும் மோகனசுந்தரம் ஆகியோர் இயற்கைவழி விவசாயம் குறித்து கலந்துரையாடுகின்றனர்.
விருப்பமுள்ளவர்கள் இணையம் மூலம் இணைந்து பயிற்சி பெற்றுக்கொண்டுப் பயனடையலாம்.
Join with Zoom Meeting
கீழே உள்ள லிங்க்-கைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
https://us02web.zoom.us/j/6689229190?pwd=eVBiU1RaZHZ6eThvb3lqd0FaT1JGZz
Meeting ID : 668 922 9190 Passcode : 2HMfYF
இணைந்து ஏற்பாடு (Arranged together)
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகமும் , MYRADA வேளாண் அறிவியல் நிலையமும், இணைந்து இந்த இணையவழி கருத்தரங்கம் மற்றும் பயிற்சியை நடத்துவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
பழங்களின் அரசன் மாம்பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?
வண்டுகள் மற்றும் ஈக்களை கட்டுப்படுத்த தோட்டக்கலை துறையினர் ஆலோசனை
ஒரு பழத்தின் விலை ரூ.500 முதல் ரூ.1,000 வரை,மத்தியப் பிரதேசத்தின் 'நூர்ஜஹான்' மாம்பழங்கள்.
Share your comments