தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் அறுவடை செய்யும் பணிகளில் விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவ் கூறுகையில், தஞ்சை மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆலோசனைக் கூட்டம் (Disscussion)
இந்நிலையில், தனியார் நெல் அறுவடை இயந்திரங்களின் (Harvesting Machine) வாடகையை முறைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் விவசாய சங்க பிரதிநிதிகள், அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர்கள், அரசு அலுவலர்கள் இணைந்த முத்தரப்புக் காட்டம் அண்மையில் நடைபெற்றது.
வாடகை ரூ.2,100 (Rent Rs.2,100)
இக்கூட்டத்தில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் வகையில் ஒருமித்த கருத்து உருவாக்கப்பட்டு பெல்ட் (Belt) வகை அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.2,100 என்று வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டயர் வாடகை (Tire rental)
டயர் வகை அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.1,600 எனவும் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது.
மேலும் வைக்கோல் கட்டும் இயந்திரத்துக்கும் நிர்ணயிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் கூடுதலாக வசூல் செய்யக்கூடாது.
எச்சரிக்கை (Warning)
நிர்ணயிக்கப்பட்ட வாடகையை விட கூடுதலாக விவசாயிகளிடமிருந்து வசூல் செய்யப்படுவதாகப் புகார் வரப்பெற்றால் நெல் அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர்கள் மீது போக்குவரத்து துறை மற்றும் காவல் துறை மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.
மேலும் படிக்க...
உச்சநீதிமன்றம் அமைத்த குழு முன்பு ஆஜராக மாட்டோம்- விவசாயிகள் அதிரடி!
பொங்கல் பரிசு இன்னும் வாங்கவில்லையா? கவலைப்படாதீங்க! கால அவகாசம் நீட்டிப்பு!
வீடு கட்டுவோர்க்கு கூடுதல் உதவித் தொகை! தமிழக அரசு அறிவிப்பு!
Share your comments