1. செய்திகள்

பெருகி வரும் தெரு நாய்களின் தொல்லை- பட்ஜெட்டில் 10 கோடி ஒதுக்கிய பிடிஆர்!

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
10 crore allocated to carry out animal breeding control works to control stray dogs

நடப்பாண்டிற்கான (2023-2024) தமிழக பட்ஜெட்டினை நிதியமைச்சர் பி.டி.ஆர் இன்று தாக்கல் செய்தார். பெருகிவரும் தெரு நாய்களின் தொல்லையினை கட்டுப்படுத்தும் வகையில் விலங்குகள் இனவிருத்தி கட்டுபாட்டு பணிகள் மேற்கொள்ள 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கலில் குறிப்பிட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மூன்றாவது முறையாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதித்துறையின் அமைச்சராக பதவி வகித்து வரும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்  3-வது ஆண்டாக காகிதமில்லா (இ-பட்ஜெட்) நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

மகளிருக்கான உரிமைத்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் உயர்வு, தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம், மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராசனுக்கு சென்னையில் நினைவிடம், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தினை விரிவுப்படுத்துதல் உட்பட பல்வேறு அறிவிப்புகளையும், திட்டங்களையும் பிடிஆர் தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக கால்நடை பராமரிப்பு பணிக்கு நடப்பாண்டில் ஒதுக்கப்பட்ட பட்ஜெட் தொடர்பான விவரங்களை பிடிஆர் சட்டப்பேரவையில் குறிப்பிட்ட விவரங்கள் பின்வருமாறு-

முதல்வர் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம், மாநிலத்தில் விலங்குகளின் நலனைப் பேணிக் காக்க மறுசீரமைக்கப்பட்டுள்ளது. பெருகிவரும் தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த விலங்குகள் இனவிருத்தி கட்டுப்பாட்டு  மையங்கள் அமைப்பது அவசியமாகும். விலங்குகள் நல வாரியத்தை வலுப்படுத்தி செம்மையாக செயல்படுத்தும் பொருட்டு, இம்மதிப்பீட்டில் 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. விலங்குகள் இனவிருத்தி கட்டுப்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளவும், உள்ளாட்சிகளின் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கவும், விலங்குகள் நலப்பணிகளைச் செயல்படுத்தவும் இந்த நிதியானது பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக தெரு நாய்களின் எண்ணிக்கையால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்த நிலையில், தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு கோரிக்கை எழுந்த வண்ணம் இருந்தது. இதனடிப்படையில், தற்போது பட்ஜெட்டில் இதற்கென தனிக்கவனம் செலுத்தி நிதி ஒதுக்கியிருப்பது வரவேற்புக்குரியது என பொதுமக்கள் தரப்பில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்தது முதலே வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த முறையினை போன்றே இந்த முறையும், வேளாண் பட்ஜெட்டினை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்ச்செல்வம் நாளை (21 ஆம் தேதி) தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான சட்டப்பேரவை உறுப்பினர்களின் விவாதம் நடைப்பெற உள்ளது. பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பின் நிதி அமைச்சர் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டிற்கு வரவேற்பும், விமர்சனங்களும் கலந்த வகையில் கருத்துகள் பெறப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண்க:

சொன்னீங்களே.. செஞ்சீங்களா? அரசு ஊழியர்களை ஏமாற்றியதா தமிழக பட்ஜெட்?

நீங்க ரொம்ப நாளா கேட்டீங்கள.. இந்தாங்க - பட்ஜெட்டில் இடம்பெற்ற பெண்களுக்கான உரிமைத்தொகையின் முழுவிவரம்

English Summary: 10 crore allocated to carry out animal breeding control works to control stray dogs Published on: 20 March 2023, 03:57 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.