1. செய்திகள்

இவர்களுக்கு மட்டும் 100 Unit இலவச மின்சார திட்டம் தொடரும்: அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

R. Balakrishnan
R. Balakrishnan

Electricity

விவசாயிகள், நெசவாளர்கள் உள்ளிட்டவர்கள் இலவச மின்சாரம், 100 யூனிட் இலவச மின்சார திட்டம் தொடரும் என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின்சார சட்ட மசோதாவில் விவசாயிகள், நெசவாளர்கள் உள்ளிட்டவர்கள் இலவச மின்சாரம், 100 யூனிட் இலவச மின்சாரம் பாதிக்கப்படும் என்றாலும் தமிழகத்தில் இலவச மின்சார திட்டம் தொடரும். ஒரு போதும் இந்த திட்டத்தை நிறுத்தி வைக்க மாட்டோம் என்றார்.

மின்சாரம் (Electricity)

மின்சாரத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் 1 யூனிட் கூட வீணடிக்காமல் உற்பத்தி செய்த மின்சாரம் முழுவதுமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி காரணமாக ஒரு சில இடங்களில் மின்வெட்டுகள் ஏற்படலாம்.

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுவரை தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை. கடந்த ஓராண்டில் சிக்கன நடவடிக்கையால் மின்வாரியத்தில் 2,700 கோடி வட்டி சேமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு புதிய திட்டங்கள் நிறைவேற்றுதல் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அந்த பகுதி மக்களிடம் பேசி கோரிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

மேலும் படிக்க

செயற்கை உரங்களின் தேவை குறைய வாய்ப்பு: புதிய வழியில் ஆராய்ச்சியாளர்கள்.!

ஏடிஎம்-ல் பணம் எடுக்க வரம்பு மற்றும் கட்டணங்கள்: புதிய அறிவிப்பு!

English Summary: 100 Unit free electricity scheme will continue only for these people: Minister's important announcement!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.