1.சென்னையில் 105.26 டிகிரி வெயில்
தமிழகத்தில் சென்னை, மதுரை, கடலூர், ஈரோடு, கரூர், நாகை, தஞ்சை, திருச்சி, திருத்தணி, வேலூர் ஆகிய 10 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது. சென்னையில் 105.26 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது. சென்னையில் நேற்றை விட இன்று வெயில் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
2.தமிழகத்தில் உர இருப்பு குறித்து அமைச்சர் அறிக்கை வெளியீடு
பயிர் சாகுபடிக்குத் தேவையான இரசாயன உரங்கள் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் 4,55,568 டன் இருப்பு உள்ளதாக வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.
3.மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.490-க்கு ஏலம்
சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் உள்ள பூ மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 4½ டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.490-க்கும், முல்லை ரூ.140-க்கும், காக்கடா ரூ.825-க்கும், செண்டுமல்லி ரூ.55-க்கும், பட்டுப்பூ ரூ.69-க்கும், கனகாம்பரம் ரூ.600-க்கும், சம்பங்கி ரூ.20-க்கும், அரளி ரூ.80-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.200-க்கு ஏலம் போனது.
4.இளநீர் விலை ரூ.34 என நிர்ணயம்
ஆனைமலை ஒன்றியத்தில் இளநீர் விலை ரூ.34 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விலை அதிகரித்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். ஆனைமலை ஒன்றியத்தில் 23 ஆயிரம் ஹெக்டேரில் தென்னை விவசாயம் நடந்து வருகிறது. தினமும் 5 லட்சம் இளநீர் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தற்போது 3 லட்சம் இளநீர் மட்டுமே அனுப்பி வைக்கப்படுகிறது. வெளி மாநிலங்களில் கோடை வெயில் வாட்டி வதைப்பதால், இளநீர் தேவை அதிகரித்து உள்ளது. இளநீர் விளைச்சல் குறைந்து உள்ளதால், அதன் விலை அதிகரித்து வருகிறது. தற்போது நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு ரக இளநீரின் விலை ரூ.34 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஒரு டன் இளநீரின் விலை ரூ.13 ஆயிரத்து,750 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கடந்த மாதம் இளநீர் விலை ரூ.27 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ரூ.7 விலை அதிகரித்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
5.சென்னையில் இன்று காய்கறிகளின் விலை நிலவரம்
தக்காளி - 25க்கும்
சின்ன வெங்காயம்- 55க்கும்
உருளைக் கிழங்கு- 25க்கும்
கேரட் - 55க்கும்
பீன்ஸ் - 110க்கும்
பூண்டு- 130க்கும்
பீட்ரூட்-35க்கும்
இஞ்சி -190க்கும்
தேங்காய்- 27க்கும் மற்றும்
வெண்டை-20க்கும் விற்பனையாகி வருகிறது.
மேலும் படிக்க
இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்தும் நிலவாகை! நிலவாகையின் வியக்க வைக்கும் பயன்கள்!
திருட்டுப் போன செல்போனை கண்டுபிடிக்க புதிய வசதி அறிமுகம்: மத்திய அரசு அறிவிப்பு!
Share your comments