1. செய்திகள்

வைகை ஆற்றிற்கு 12,000 பேர் வருவார்கள் என எதிர்பார்ப்பு!

Poonguzhali R
Poonguzhali R

12,000 people are expected to come to Vigai River!

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மற்றும் வைகை ஆற்றில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆய்வு செய்தார். நிர்வாகிகள் அளவிலான கூட்டங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நிகழ்வின் காலகட்டத்தினைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.


"இந்த ஆண்டு, மே 2-ம் தேதி திருக்கல்யாணத்திற்கு 12,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கூட்டம் எளிதில் நிற்கும் வகையில் தமுக்கம் பகுதிக்கு அருகில் உள்ள பூங்காக்கள், கல்லூரிகள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களை இரவில் திறந்து வைக்க அறிவுறுத்தியுள்ளோம். கள்ளலழகர் ஊர்வலத்தை காண பாரம்பரியக் காளை மாட்டு வண்டிகள் திருவிழாவிற்கு அனுமதிக்கப்படும்" என்று அமைச்சர் கூறியிருக்கிறார்.

மேலும், 1,058 தமிழக கோயில்களில் 1,416 கோயில் குளங்களை திமுக அரசு பராமரித்து வருவதாக சேகர் பாபு குறிப்பிட்டார். இதுவரை 87 குளங்களில் பராமரிப்பு பணியினை அரசு முடித்துள்ளது. பழனி, திருப்பரங்குன்றம், திருநீர்மலை, திருக்கழுக்குன்றம் ஆகிய நான்கு கோவில்களில், 66 கோடி ரூபாய் செலவில், 'ரோப்கார்' அமைக்கும் பணி, தொட்டிகளில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுப்பணியில் சேகர்பாபு, அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை எம்.பி.எஸ்.வெங்கடேசன், மாநகர போலீஸ் கமிஷனர் கே.எஸ்.நரேந்திரன் நாயர், மாவட்ட கலெக்டர் டாக்டர் எஸ்.அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜீத் சிங் கலான் மற்றும் அரசியல் தலைவர்கள் இருந்தனர்.

சித்திரை திருவிழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அரங்கு தயார் செய்யவும், ஏ.வி.பாலத்திற்கு வர்ணம் பூசவும், ஆற்றுக்குள் உள்ள பாறைகளை அகற்றவும் சுமார் 40 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக கள்ளழகர் கோவிலை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது இந்த வாரத்தில் நிறைவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

மதுரையில் நான்கு வாரங்களில் 6.7 டன் கொப்பரை கொள்முதல்!

காரைக்காலில் முதல் முறையாக 2 ஏக்கரில் தினை சாகுபடி!

English Summary: 12,000 people are expected to come to Vigai River!

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.