தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி தொடர்ச்சியாக 4 நாட்கள் அரசு விடுமுறை நாட்கள் வர உள்ள நிலையில், பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது சிறப்பாகும்.
தமிழ் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளி உட்பட தொடர்ச்சியாக 4 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வர திட்டமிட சரியான நேரமாகும். எனவே, இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு, கூடுதல் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்திருப்பது சிற்பாகும். 14-ம் தேதி தமிழ்புத்தாண்டும். 15-ம் தேதி புனித வெள்ளி அதனைத்தொடர்ந்து சனி, ஞாயிறு அரசு விடுமுறை தொடர்ந்து வருகிறது. பண்டிகை மற்றும் சிறப்பு தினங்கள் தொடர்ச்சியாக வருவதால் பொதுமக்களின் பயணத் தேவை அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதால் தமிழக அரசு, இந்த சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு சென்னையிலிருந்து திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு நாள்தோறும் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளுடன் கூடுதலாக 1,200 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் வரும் விடுமுறை நாட்களுக்காக இயக்கப்பட உள்ளன.
மேலும் சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக 17ஆம் தேதி அனைத்து முக்கிய நகரங்களில் இருந்தும் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்து இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
எனவே, இந்த விடுமுறை நாட்களில் பயணம் செய்ய உள்ளவர்கள், இந்த வசதியை பயன்படுத்தி பயணத்தை மேற்கொள்ளும் மாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் பேருந்து விவரங்களை ஜங்க்ஷன் அல்லது பேருந்து நிலையங்களில் சென்று அறிந்துக்கொள்ளலாம். விடுமுறை நாட்கள் முன்னிட்டு அரசின் இந்த சிறப்பு ஏற்பாடு மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க:
Hair Care: தேங்காய், தேன்.. உபயோகித்து கூந்தலுக்கான ஹேர் மாஸ்க் !
பி.எம் கிசான் போன்ற திட்டங்கள் விவசாயிகளுக்கு புதிய பலம்: பிரதமர் பெருமிதம்
Share your comments