2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகமாக இருந்ததால் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. அடுத்த உயர்வு எப்போது கிடைக்கும் என்று ஊழியர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், சென்ற ஜூலை மாதத்தில் அதற்கான அறிவிப்பு வெளியானது. அதன் பின்னர் அடுத்தடுத்து உயர்த்தப்பட்டு 34 சதவீத அகவிலைப்படி உயர்வு கிடைத்தது.
அகவிலைப்படி (Gratuity)
மத்திய அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மாநில அரசுகள் ஒவ்வொன்றாக தங்களது அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை அறிவித்து வருகின்றன. சமீபத்தில் தமிழக அரசும் அகவிலைப்படி உயர்வை அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது ஒடிசா மாநில அரசும் அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளது.
ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 31 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 7.5 ஊழியர்கள் மற்றும் பென்சன்தாரர்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில்தான் ஒடிசா மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 28 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது அடுத்த உயர்வு கிடைத்துள்ளதால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் படிக்க
Share your comments