ஜெயலலிதா பிறந்தநாள் பரிசாக நீலகிரி மாவட்டத்தில் பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படவிருந்த ஆயிரக்கணக்கான கோழிக்குஞ்சுகளை தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சட்டமன்றத் தேர்தல் (Assembly Election)
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதிநடைபெற உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் தற்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் (Code of Conduct Violation) அமலில் உள்ளன.
தேர்தல் நடத்தை விதி (Code of Conduct Violation)
இதன்படி பொது மக்களுக்குப் பணம், பரிசு பொருள்கள் மற்றும் விலையில்லா பொருட்களை வழங்கக் கூடாது என்பதும் முக்கிய விதி.
ஆனால் நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த முதல் நாளே,நடத்தை விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு பரிசுப் பொருள்களை வழங்கிய ஆளுங்கட்சியினர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதோடு பரிசுப் பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.
கோழிக்குஞ்சுகள் பறிமுதல் (Seizure of chickens)
இந்த நிலையில், குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விலையில்லா கோழிக்குஞ்சுகளை வீடு வீடாக வழங்கி வந்துள்ளனர்.
இதுதொடர்பாக தேர்தல் அதிகாரிகளுக்குப் புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில் நேரில் சென்று ஆய்வு செய்த தேர்தல் அதிகாரிகள் 4,500 கோழிக்குஞ்சுகளை பறிமுதல் செய்து பண்ணைகளுக்கே திருப்பி அனுப்பி வைத்தனர்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கையில், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இயக்குநர், ஒரு குடும்பத்திற்கு 25 கோழிக்குஞ்சுகள் வீதம், ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கவே தற்போது கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் இந்த கோழிக்குஞ்சுகள் கொண்டுவரப்பட்டன. தேர்தல் விதிமுறை மீறல் என்பதால் திருப்பி அனுப்பி விட்டோம். இவ்வாறு அவர் கூறினர்.
மேலும் படிக்க...
Free Cooking Gas: ஒரு கோடி ஏழைகளுக்கு இலவச சமையல் சிலிண்டர்- உடனே விண்ணப்பியுங்கள் !
Share your comments