1. செய்திகள்

பேருந்துகளில் ஆண்களுக்கு 50% இட ஒதிக்கீடு-அரசு அறிவிப்பு!

Poonguzhali R
Poonguzhali R
50% reservation for Male Passengers in buses-Government notification!

நாட்டிலேயே முதல் முதலாகக் கர்நாடக அரசு பஸ்களில் ஆண்களுக்கு 50 சதவீத இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.

கர்நாடகத்தில் ஆட்சி அமைத்துள்ள காங்கிரசு அரசு, தேர்தலின் போது அளித்த 5 இலவச திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றி இருக்கிறது. இந்நிலையில் அவ்வறிக்கையின்படி கர்நாடகத்தில் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டு இருந்தது. அவர்கள் குளிர்சாதன மற்றும் படுக்கை வசதி கொண்ட பஸ்களைத் தவிர்த்து இயங்கக் கூடிய பிற பேருந்துகளில் மாநிலம் முழுவதும் சென்று வரலாம் என்றும் சித்தராமையா அறிவித்திருந்தார் என்பது நினைவுக்கூறத்தக்கது.

இந்த திட்டம் வருகிற 11-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் ஒரு அரசு பஸ்சில் முழுவதுமாக பெண்கள் மட்டும் செல்ல முடியாது எனவும், ஆண்களுக்காக 50 சதவீத இருக்கைகள் ஒதுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்து இருந்தார். அதாவது, இதன்மூலம் கர்நாடக அரசு பஸ்களில் ஆண்கள் பயணம் செய்ய 50 சதவீத இருக்கைகள் ஒதுக்கப்படும் என்று சித்தராமையா அறிவித்திருந்தார்.

நாட்டிலேயே முதல் முறையாக அரசு பஸ்களில் ஆண்களுக்கு 50 சதவீத இருக்கைகள் ஒதுக்குவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கும் போது, முழுமையாக பெண்களே இருக்கையில் அமர்ந்து கொண்டால் ஆண்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் பெண்களே பயணித்தால், அந்த பஸ் மூலமாக போக்குவரத்து துறைக்கு பெரிய அளவில் வருவாய் கிடைக்காது. இதுபோன்ற காரணங்களால் தான் அரசு பஸ்களில் ஆண்களுக்கு 50 சதவீத இருக்கை ஒதுக்கப்பட்டு இருக்கிறது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க

தொடர்ந்து சரியும் தங்கம் விலை! இன்றைய விலை நிலவரம்!

மண்ணில் நைட்ரஜனை இயற்கையாக சேர்ப்பது எப்படி? விவரம் உள்ளே!

English Summary: 50% reservation for Male Passengers in buses-Government notification! Published on: 05 June 2023, 04:54 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.