ஒட்டன்சத்திரம் பகுதியில் நடவு செய்யப்பட்டுள்ள சின்ன வெங்காயம் செழிப்பாக வளர்ந்துள்ளது. அதில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. சாகுபடி செய்யப்பட்டுள்ள வெங்க்காயமும், வெங்காய பூக்களில் இருந்து எடுக்கப்படும் விதைகளும் வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இது ஒரு கிலோ ரூ.3 ஆயிரம் விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு விளக்குகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாகச் சின்ன வெங்காயம் இரண்டு முறைகளில் சாகுபடி செய்யப்படுகிறது. வெங்காயத்தை நடவு செய்து சாகுபடி செய்வது ஒரு வகையாகும். அடுத்த வகையாக வெங்காய விதைகளை நாற்றாக வளர்த்து, நடவு செய்வது இன்னொரு வகையாகும் .இரண்டாவது வகையில் சாகுபடி செய்தால் மகசூல் அதிகம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: ஆடு, மாடு வளர்ப்புக்கு ரூ.50 கோடி நிதி! அரசு அறிவிப்பு!!
அதனால் கடந்த சில ஆண்டுகளாக ஒட்டன்சத்திரம் பகுதியில் சின்ன வெங்காயத்தின் விதை உற்பத்தியும் வெகு அதிகமாக நடைபெற்று வருகின்றது. இன்னும் சொல்லப்போனால் ஒரு ஏக்கரில் சின்ன வெங்காயம் பயிரிட 500 கிலோ வரை வெங்காய விதை வாங்க வேண்டிய நிலை இருக்கும். ஒரு கிலோ விதை வெங்காயம் ரூ.50 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகின்றது. அதிலும் அறுவடை செய்து 45 நாட்கள் ஆன வெங்காயத்தினை மட்டுமே பயிரிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முறையில் செலவு அதிகம் என்பதும் நோக்கத்தக்கது. அதே நிலையில் ஒரு ஏக்கருக்கு, சின்ன வெங்காயப் பூக்களில் இருந்து எடுக்கப்படும் விதைகள் ஒன்றரை கிலோ போதுமானதாக இருக்கும். இந்தவகை வெங்காய விதை ஒரு கிலோ ரூ.3000 முதல் ரூ.4000 வரை விற்பனை செய்யப்படுகின்றது. இதில் செலவு குறைவு என்பதால் பெரும்பாலான விவசாயிகள் பூவில் இருந்து எடுக்கப்படும் வெங்காய விதைகளை வாங்கிப் பயிரிட விரும்பம் காட்டி வருகின்றனர். அகையால் வெங்காயப் பூவில் இருந்து எடுக்கப்படும் விதைகளுக்குக் கிராக்கி அதிகம் இருக்கிறது.
ஆகவே விவசாயிகள் சின்ன வெங்காயம் விதை உற்பத்தியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்பொழுது ஒட்டன்சத்திரம் பகுதிகளில் சின்ன வெங்காயப் பூக்களில் பூக்கள் பூத்துக் குலுங்குவது ரம்மியமாக காட்சியளிக்கிறது. ஒரு கிலோ வெங்காய விதை ரூ.3000-க்கு விற்பனையாவதால் அப்பகுதி விவசாயிகள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
இது குறித்து கருத்துத் தெரிவித்த கேதையுறும்பு பகுதியினைச் சேர்ந்த விவசாயி பரமேஸ்வரன் கூறுகையில் விதை வெங்காயம் மூலம் நடவு செய்வதை விட விதை மூலம் வெங்காயம் சாகுபடி செய்யவே விவசாயிகள் விரும்புகின்றனர் என்று கூறியுள்ளார். ஆகையால் சின்ன வெங்காய விதைக்கு விவசாயிகள் மத்தியில் வரவேற்பு இருக்கின்றது. ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு அதிகளவில் சின்ன வெங்காய விதை விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிகிறது.
மேலும் படிக்க
50% மானியத்தில் விவசாய உபகரணங்கள்: விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு!
விவசாயிகளே மகிழ்ச்சி செய்தி!! நுண்ணீர் பாசன திட்டத்திற்கு ரூ.450 கோடி!
Share your comments