1.பால் பொருட்களை தொடர்ந்து, ஆவின் நிறுவனம் குடிநீர் விற்பனை
பால் பொருட்களை தொடர்ந்து, குடிநீர் விற்பனையிலும் ஆவின் நிறுவனம் விரைவில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலமாக குடிநீர் பாட்டில்கள் விற்பனைக்கு ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அரை லிட்டர் (500 ml) முதல் ஒரு லிட்டர் (1 L) வரையிலான குடிநீர் பாட்டில்களை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது ஆவின் நிறுவனம். மேலும், நாளொன்றுக்கு ஒரு லட்சம் குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்யவும் ஆவின் நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதற்கான டெண்டரினை ஆவின் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், விரைவில் ஆவின் வாட்டர் பாட்டில்கள் விற்பனைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
2,ஏற்காட்டில் 46-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடக்கம்
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 46-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து நேற்று தொடங்கி வைத்தனர். மேலும், இவ்விழாவில் 161 பயனாளிகளுக்கு ரூ.1.39 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் பெருமக்கள் வழங்கினார்கள்.
இக்கண்காட்சி வருகிற 28 ஆம் தேதி வரை நடைப்பெற உள்ளது. இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
3.அதிரடியாக விலையுயர்ந்த துவரம் பருப்பு
விருதுநகர் மார்க்கெட்டில் உளுந்து 100 கிலோ மூடைக்கு ரூ.8 ஆயிரம் ஆகவும், உருட்டு உளுந்தம் பருப்பு ரூ.11 ஆயிரம் ஆகவும், தொலி உளுந்தம் பருப்பு ரூ.9,800 ஆகவும் விற்பனை ஆனது. பாசிப்பருப்பு 100 கிலோ மூடைக்கு ரூ.200 விலை உயர்ந்து ரூ.10,300 ஆகவும், பாசிப்பயறு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.11,500 வரையிலும் விற்பனையானது. துவரை 100 கிலோ மூடை ரூ.6,400 முதல் ரூ.7,700 வரையிலும், துவரம் பருப்பு 100 கிலோ மூடைக்கு ரூ.800 விலை உயர்ந்து ரூ.11,700 முதல் ரூ.12,500 வரையிலும் விற்பனையானது.
4.4 3\4 லட்சத்திற்கு வாழைத்தார்கள் ஏலம்
அந்தியூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் வாழைத்தார் ஏலம் நடைபெற்றது. இதற்கு அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 2ஆயிரத்து 700 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டன.
இதில் கதலி (கிலோ) ரூ.17-க்கும், நேந்திரம் ரூ.33-க்கும் ஏலம் போனது. பூவன் (தார்) ரூ.460-க்கும், செவ்வாழை ரூ.630-க்கும், ரஸ்தாளி ரூ.510-க்கும், தேன்வாழை ரூ.350-க்கும், மொந்தன் ரூ.250-க்கும், ரொபஸ்டா ரூ.260-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.4 லட்சத்து 76 ஆயிரத்து 600-க்கு வாழைத்தார்கள் விற்பனை செய்யப்பட்டன.
5.திடீரென விலை குறைந்த தங்கம்
தங்கம் விலை சவரனுக்கு ரூ. 40 குறைவு.
ஒரு கிராம் தங்கம் ரூ. 5,675-க்கும், சவரன் 45,400 ரூபாய்க்கும் விற்பனை.
6.ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் வரை விலைபோன காங்கேயம் ஜோடி காளைகள்
அந்தியூர் கால்நடை சந்தை நேற்று கூடியது. இதற்கு ஈரோடு, கோபி, பர்கூர், மேட்டூர், கொளத்தூர், பண்ணவாடி, எடப்பாடி, தர்மபுரி மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த விவசாயிகள் ஏராளமான கால்நடைகளை பிடித்து வந்திருந்தனர்.
இதில் கொங்கு காளை மாடு ஜோடி ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் வரையும், காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ.80 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரையும், நாட்டு பசு மாடு ஒன்று ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரம் வரையும், ஜெர்சி பசுமாடு ஒன்று ரூ.20 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சம் ரூ.40 ஆயிரம் வரையும், சிந்து பசு மாடு ஒன்று ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.45 ஆயிரம் வரையும் விலைபோனது.
மேலும் படிக்க
ஏற்காட்டில் 46-வது மலர் கண்காட்சி கோலகாலமாக தொடங்கியது!
குறுவை சாகுபடி- ஆடுதுறை நெல் ரகத்தை (ADT) விரும்பும் விவசாயிகள்
Share your comments