1. செய்திகள்

Aavin: பலாப்பழ ஐஸ்கிரீம் உட்பட 10 புதிய பொருட்கள் அறிமுகம்! என்னென்ன?

Deiva Bindhiya
Deiva Bindhiya

Aavin: Introducing 10 New Products Including Jackfruit Ice Cream! what are they?

தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் புதிய பால் பொருட்கள் அறிமுக விழா ஏற்பாடு செய்தது. இ்வ்விழாவை தலைமை தாங்கினார், தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர். இதில் ஆவின் மூலம் தயாரிக்கப்பட்ட 10 புதிய பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

ஆவின் மூலம் தயாரிக்கப்பட்ட பலாப்பழ ஐஸ்கிரீம், கோல்டு காஃபி உள்ளிட்ட 10 புதிய பொருட்களை அறிமுகப்படுத்திய பால் வளத்துறை அமைச்சர் நாசர், இந்தப் புதிய பொருட்கள் மூலம் மாதம் ரூ.2 கோடி வரை லாபம் வரும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.

ஆவின் சார்பில் 10 புதிய பொருட்களை அறிமுகம் செய்து வைத்து பால்வளத் துறை அமைச்சர் நாசர், சென்னை நந்தனத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "ஏழை, எளிய மக்கள், நடுத்தர மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில், அதேநேரத்தில் தனியார் நிறுவனங்களிடமிருந்து மாறுபட்டு, வித்தியாசமான சூழலில், எந்தவிதமான கலப்பும் இல்லாமல், ரசாயனங்களும் சேர்க்காமல், முழுக்க முழுக்க வியாபாரம் நோக்கம் இல்லாமல், இந்த 10 புதிய பொருட்களும் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்குவதாக தெரிவித்தார்.

கறந்த பால், கறந்தபடி தாய்ப்பாலுக்கு நிகராக உருவாக்கப்பட்டு, இவ் 10 புதிய பொருட்களை வெளியிடுள்ளோம். பலாப்பழ ஐஸ்கிரீம், வெள்ளை சாக்லேட், கோல்டு காஃபி, வெண்ணெய் கட்டி, பாசுந்தி, ஆவின் கேக் மிக்ஸ், பாலாடைக்கட்டி, அடுமனை யோகார்ட், ஆவின் பால் பிஸ்கெட், ஆவின் வெண்ணெய் முறுக்கு, போன்றவை இன்றைய தினம் அறிமுகம் செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த புதிய பொருட்கள் மூலம் மாதம் ரூ.2 கோடி வரை லாபம் வரும் என எதிர்பார்ப்பு இருப்பதாகவும், அவர் தெரிவித்தார். மேலும் ஆவின் குடிநீர் குறித்து தமிழக முதல்வர் அறிவிப்பார். தனியார் பால் நிறுவனங்களின் விலை உயர்வு காரணமாக ஆவினில் 50 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை அதிகரித்துள்ளது" என்றும் அவர் கூறினார்.

மேலும் படிக்க:

தேசிய சமையல் எண்ணெய் திட்டம்: விவசாயிகளுக்கு 3 லட்சம் வரை மானியம்!

வறட்சியை தாங்கும் சுரைக்காய்: ஓராண்டில் நல்ல மகசூல்!

English Summary: Aavin: Introducing 10 New Products Including Jackfruit Ice Cream! what are they?

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.