தமிழ்நாட்டில் சிறப்பாகவும் திறமையாகவும் சேவையினைப் பொதுமக்களுக்கு அளிப்பதில் தமிழ்நாடு அரசு ஆவின் நிறுவனம் முக்கியப் பங்காற்றுகின்றது. இந்த ஊழியர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகை வழங்கப்பட இருக்கிறது.
எனவே, இதில் பங்காற்றிய ஊழியர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகை கொடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம். ஆவினின் அனைத்து நிறுவனங்களிலும் தற்பொழுது சுமார் 27,189 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு சுமார் ரூ.2.7 கோடி ரூபாயைப் பொங்கல் போனஸ் ஊக்கத்தொகையாக வழங்கப்பட இருக்கிறது.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சா. மு. நாசர் இந்த ஊக்கத்தொகை பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளார். மதுரை ஆவின் நிறுவனம் மொத்தம் 38 ஆயிரத்து 82 உறுப்பினர்களை கொண்டு இருக்கிறது. 716 கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கங்களின் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 1 லட்சத்து 71 ஆயிரத்து 400 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சிறப்பு கண்காணிப்பில், பால்வளத்துறை அமைச்சரின் மேற்பார்வையில், நிர்வாக இயக்குநர், ஆணையாளரின் தொழில்நுட்ப அறிவுரைகளின்படி மதுரை ஆவின் பொதுமேலாளர், களப்பணியாளர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களின் முழு ஒத்துழைப்புடன் ரூ.13.71 கோடி லாபம் ஈட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கால்நடைத்தீவன செலவு உள்ளிட்ட பால் உற்பத்தி செலவு அதிகரிப்பால் திண்டாட்டமாக உள்ள பால் உற்பத்தியாளர்களின் நிலையை கொண்டாட்டமாக மாற்றும் வகையில் இந்த உத்தரவு வெளிவந்துள்ளது.
மேலும் படிக்க
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்குப் பொங்கல் ஊக்கத்தொகை அறிவிப்பு!
பொங்கலுக்குச் செங்கரும்பு அறுவடை தீவிரம் - மகிழ்ச்சியில் விவசாயிகள்!
Share your comments