1. செய்திகள்

AB-PMJAY:நடுத்தர வர்க்கத்தினருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம்- மத்திய அரசு ஒப்புதல்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Ayushman Bharat project for middle class
Credit:News Click

ஏழை மக்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டமான, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், ஏழை அல்லாதவர்களையும் உள்ளடக்கும் வகையில், அனைத்து சுகாதார காப்பீட்டு திட்டங்களையும் ஒருங்கிணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

ஆயுஷ்மான் பாரத் திட்டம்

இந்தியாவின் ஏழை குடும்பங்கள், நல்ல தரமான, சுகாதார வசதியை மலிவான விலையில் பெறுவதற்காகக் கொண்டுவரப்பட்டதே, ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் ஜன் ஆரோக்கிய யோஜ்னா திட்டம் (Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana’(AB PMJAY).

இதன்மூலம் , சுமார் 10 கோடி குடும்பங்களுக்கு, அதாவது சுமார் 50 கோடி இந்தியர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில், ஆண்டிற்கு 5 லட்சம் ரூபாய் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்படும்.

1,354 வகையான சிகிச்சைகளுக்கு, இந்தத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம். நாட்டில் எங்கு வேண்டுமானாலும், அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனைகளில் பயனாளிகள் சிகிச்சை பெற முடியும்.

இரத்தக் குழாய் சார்ந்த சிகிச்சைகள், மூட்டுவலி சார்ந்த சிகிச்சைகள் உள்ளிட்ட மேலும் பல சிகிச்சைகளுக்கு 15 முதல் 20 சதவீதம் வரை மத்திய அரசு மருத்துவமனைகளை விடக் குறைந்தக் கட்டணத்தில் சிகிச்சை பெறலாம். இது மத்திய அரசால் குடிமக்களுக்கு வழங்கப்படும் உலகின் பெரிய மருத்துவ திட்டம் ஆகும்.

நிதிப் பங்கீடு (Fund Allotment)

3,500 கோடி ரூபாய் செலவிலான இத்திட்டத்திற்கு 60 சதவீத நிதியை மத்திய அரசும், 40 சதவீத நிதியை மாநில அரசும் வழங்குகின்றன.

யார் பயனடையலாம்?  (Beneficiaries)

சமூகத்தில் பின்தங்கியோர், பொருளாதார அடிப்படையில் பின்தங்கியோர், சாதியின் அடிப்படையில் பின்தங்கியோர் ஆகியோருக்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தேவையான ஆவணங்கள் (Documents)

இத்திட்டத்தின் நன்மைகளை பெற ஆதார் அட்டை அவசியமில்லை. வாக்காளர் அட்டையோ, குடும்ப அட்டையோ இருந்தால் போதும்.

குடும்பத்தினரின் எண்ணிக்கையோ வயதோ ஒரு தடையாகக் கருதப்படாது.
ஏழைகளால் வரவேற்கப்படும் இத்திட்டம், பலரால் எதிர்ப்புகளையும் பெற்று வருகிறது.

ஏழை அல்லாதவர்களும் சேர்ப்பு (Non-Poor)

இந்நிலையில் ஆயுஷ்மன் பாரத் பிரதம மந்திரி ஜன் அரோக்ய யோஜனா திட்டத்தில், ஏழை அல்லாத மக்களையும் உள்ளடக்குவதற்கு, இத்திட்டத்தை செயல்படுத்தும் அமைப்பான தேசிய சுகாதார ஆணையத்தின் (NHA) நிர்வாக குழு ஒப்புதல் அளித்துள்ளது.

Credit:The Conversation

இதன்மூலம் அமைப்பு சாரா தொழிலாளர்கள், சுயதொழில் செய்பவர்கள், தொழில் வல்லுநர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் (MSME) பணியாற்றும் ஊழியர்கள் ஆகியோர்களும் இந்த காப்பீட்டு திட்டத்தில் இணைக்கப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி?

இத்திட்டத்தைப் பெற தகுதியானோர், அரசு மருத்துவமனைகளையோ அல்லது அரசால் குறிப்பிடப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளையோ அணுகி, சிகிச்சையைப் பெறலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

  • அங்கு Am I Eligible என்பதை கிளிக் செய்யவும். 

  • உங்கள் கைபேசி எண்ணை பதிவு செய்துவிட்டு, திரையில் தோன்றும் மற்றும் CAPTCHA codeயைப் பூர்த்தி செய்தவுடன் உங்கள் கைபேசிக்கு OTP வரும்.

  • பிறகு உங்கள் மாநிலத்தின் பெயர், கைபேசி எண், ரேஷன் அட்டை எண் போன்றவற்றைப் பூர்த்தி செய்து உங்கள் குடும்பம், இந்தத் திட்டத்தால் பயன்பெற முடியுமா? என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

இதைத்தவிர ஆயுஷ்மான் பாரத் யோஜ்னா கால் சென்டரின் 14555 அல்லது 1800-111-565 என்ற எண்களைத் தொடர்பு கொண்டு விபரங்களைப் பெறுங்கள்.

மேலும் படிக்க...

தைராய்டு பிரச்னை வராமல் தடுக்கும் செம்பு பாத்திரம்! 10 மருத்துவப் பயன்களின் பட்டியல் இதோ!

நீண்ட ஆயுளைப் பெற வாழை இலைக்கு மாறுங்கள்!- நோய்களுக்கும் குட்பை சொல்லலாம்!

English Summary: AB-PMJAY: Ayushman Bharat project for middle class - Central government approves! Published on: 15 August 2020, 06:51 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.