கோவை கொடிசியா `அக்ரி இன்டெக்ஸ்' வேளாண் கண்காட்சியானது, கோவையில் நாளை முதல் ஜூலை 17 வரை நடைபெற இருக்கிறது. இன்றுவரை இந்த வேளாண் கண்காட்சியின் 20 பதிப்புகள் நடைபெற்று முடிந்து இருக்கின்றன. தற்பொழுது Agri Index 21-ம் பதிப்பானது, நாளை முதல் ஜூலை 17-ம் தேதி வரையான நாங்கு நாட்கள் கொடிசியா விவசாயக் கண்காட்சி வளாகத்தில் நடைபெற இருக்கிறது.
கோவை மாவட்டச் சிறு தொழில்கள் சங்கம் கொடிசியா பகுதியில் உள்ள சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, அதிலும் குறிப்பாகப் பொறியியல் மற்றும் உற்பத்தி சார்ந்த தொழிற்சாலைகளுக்குச் சேவை புரியும் அமைப்பு என்பது அறிந்த ஒன்றாகும்.
இந்த வேளாண் அமைப்பு சார்பில் கடந்த 2000-ம் ஆண்டு முதல் `அக்ரி இன்டெக்ஸ்' எனும் வேளாண் கண்காட்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றது. நாட்டின் முக்கியப் பொருளாதாரத்துக்குப் பெரும் பங்களித்து வருகின்ற வேளாண் துறையில் ஈடுபட்டு வருகின்ற விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பத்தினை நேரடியாக அறிமுகப்படுத்தும் வகையில் இவ்வேளாண் கண்காட்சி அமைய இருக்கிறது.
வேளாண் கண்காட்சியானது, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், இந்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை, இந்திய சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கான அமைச்சகம், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம், புனேவில் உள்ள அகில இந்திய வேளாண் இயந்திர உற்பத்தியாளர்கள் சங்கம் முதலிய அமைப்புகளின் ஆதரவுடன் இக்கண்காட்சி நடைபெற இருக்கிறது.
இது குறித்து அக்ரி இன்டெக்ஸ் 2023 தலைவர் கே.தினேஷ்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,மொத்தம் 485 நிறுவனங்கள் பங்கேற்க இருக்கும் இந்த வேளாண் கண்காட்சியில் 3.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் அரங்குகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன என்றும், கண்காட்சியினைக் காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை காணலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை நடைபெற இருக்கும் தொடக்க விழாவில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, கோவை மேயர் ஏ.கல்பனா, கோவை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
மேலும் படிக்க
நாளை சென்னையில் மின்வெட்டு! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
மக்காச்சோளம் குறித்த இலவசப் பயிற்சி! நாமக்கல் விவசாயிகளுக்கு அழைப்பு!!
Share your comments