1. செய்திகள்

வேளாண்மை செய்திகள்: PM-Kisan | விவசாயிகளுக்கான பிரதமரின் வாக்குறுதிகள்!

Poonguzhali R
Poonguzhali R
Agri News: TN Farmer | TN Horticulture | Subsidy |

சபரிமலையில் நிறைப்புத்தரிசி பூஜை: நெற்கதிர்கள் அறுவடை, பிரதமர் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: விவசாயிகள் போராட்டம், ஊத்துக்குளி வெண்ணை உற்பத்தி சரிவு: தொழிலாளர்கள் வேதனை, கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை! ஆட்சியரின் அதிரடி உத்தரவு, 2600 கோடி ரூபாய்க்கு பொம்மை ஏற்றுமதி: இந்தியா சாதனை, கல்லூரி மாணவர்கள் அரசு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்: தருமபுரி ஆட்சியர் அறிவிப்பு முதலான தகவலகலை விரிவாக இப்பதிவு வழங்குகிறது.

சபரிமலையில் நிறைப்புத்தரிசி பூஜை: நெற்கதிர்கள் அறுவடை!

கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், ஆண்டுதோறும், அடி மாதம் நிறைப்புத்தரிசி பூஜை நடத்தப்படுவது வழக்கம். இதற்காகத் தேவசம்போர்டுக்குச் சொந்தமான வயலில் நெல் பயிரிடப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நிறைபுத்தரிசி பூஜை சபரிமலையில் வரும் ஆகஸ்ட் 4 அன்று அதிகாலை 5.40 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த பூஜைக்கான நெற்கதிர்கள் தேவசம்போர்டுக்கு சொந்தமான செட்டிக்குளங்கரை வயல்களில் இருந்து அறுவடை செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை - நெற்கதிர்கள் அறுவடை!

பிரதமர் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: சேலம் விவசாயிகள் போராட்டம்!

விவசாய உற்பத்தி பொருட்களுக்கு ஆதார விலை வழங்கிட வேண்டும் எனக் கோரி சேலத்தில் ஐக்கிய விவசாயிகள் சங்கத்தினர் மரியாதை போராட்டத்தில் ஈடுப்பட்டனர். கடந்த 2021-ஆம் ஆண்டில் மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியது. இச்சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடியதால் அவை வாபஸ் பெறப்பட்டன. இதனை அடுத்தே, பிரதமர் ஆதார விலை குறித்தும், இதர கோரிக்கைகள் குறித்தும் குழு அமைக்கப்பட்டுத் தீர்வு வழங்கப்படும் என்றார். ஆனால், குழு அமைக்கப்பட்டதே தவிர தீர்வு இதுவரை கிடைக்கவில்லை என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஊத்துக்குளி வெண்ணை உற்பத்தி சரிவு: தொழிலாளர்கள் வேதனை!

உலகப் புகழ்பெற்ற ஊத்துக்குளி வெண்ணெய் உற்பத்திக்குத் தேவையான பாலுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வெண்ணெய் உற்பத்தி நலிவடைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியில் தயாரிக்கப்படும் எருமை வெண்ணெய் உலகப் புகழ் பெற்றது ஆகும். இப்பகுதியிலிருந்து பால் பொருட்கள் ஒவ்வொரு நாளும் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு ரயில் மூலம் அனுப்பப்படுவது வழக்கம். ஆனால் தற்பொழுது விவசாயிகள் எருமை வளர்ப்பதைக் குறைத்தும், வளர்க்கும் எருமைகளை விற்றும் வருவதால் எருமை பாலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, ஊத்துக்குளி வெண்ணெய் உற்பத்தி நலிவடையும் நிலையிலுள்ளது என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை! ஆட்சியரின் அதிரடி உத்தரவு

நாமக்கல் மாவட்டத்தில் மூலிகை சுற்றுலா தளமாகக் கொல்லிமலை விளங்கி வருகிறது. கொல்லிமலை கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1300 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. கொல்லிமலைப் பகுதியில் அறப்பளீஸ்வரர் கோவில், எட்டிகை அம்மன் கோவில், நம் அருவி, மாசிலா அருவி, ஆகாயக் கங்கை நீர்வீழ்ச்சி, படகு இல்லம் முதலான சுற்றுலா மையங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வார விடுமுறை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில், கடந்த சில தினங்களாகக் கொல்லிமலையில் பெய்து வரும் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கல்லீரல் விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சி: தொடங்கி வைத்தார் கோவை கமிஷ்னர்!

கோவையில் நடைபெற்ற கல்லீரல் தொடர்பான நோய் குறித்த விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சியைக் கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். கே.எம்.எச் மருத்துவமனை சார்பாக நடத்தப்பட்ட “ஆரோக்கியமான கல்லீரல்! மகிழ்ச்சியான வாழ்க்கை” எனும் பொருண்மையில் நடந்த இந்நிகழ்ச்சியில், கே.எம்.எச் மருத்துவமனையின் செயல் இயக்குநர் அருண் பழனிச்சாமி முன்னிலை வகித்தார். பேரணியை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்துத் துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்: தருமபுரி ஆட்சியர் அறிவிப்பு

தருமபுரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் விடுதிகளில் சேர கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சாந்தி அறிவித்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் தருமபுரி அரசு கலைக்கல்லூரி அருகில் ஒரு கல்லூரி மாணவர் விடுதியும், 2 கல்லூரி மாணவியர் விடுதிகளும் இருக்கின்றன. அதோடு, காரிமங்கலம் வட்டம பெரியாம்பட்டியில் ஒரு மாணவர் மற்றும் 3 மாணவியர் விடுதியும் உள்ளது. இந்நிலையில் 2022-23 ஆம் கல்வி ஆண்டில் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் தங்கள் கல்லூரிக்கு அருகில் உள்ள விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

2600 கோடி ரூபாய்க்கு பொம்மை ஏற்றுமதி: இந்தியா சாதனை!

ஒவ்வொரு மாத்தத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் மனதின் குரல் எனும் நிகழ்ச்சியில் வானொலி மூலம் பிரதமர் மோடி மக்களுடன் உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியில், கொரோனா தொற்றுப் பரவல் காலத்தில் சுமார் 2600 கோடி ரூபாய்க்கு பொம்மைகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளதாகப் பிரதமர் தெரிவித்துள்ளார். அதோடு, முன்னர் 3000 கோடி ரூபாய் மதிப்புள்ள பொம்மைகளை வெளிநாட்டிலிருந்து இந்தியா இறக்குமதி செய்து வந்தது. ஆனால், தற்போது 2600 கோடிக்கு ஏற்றுமதி செய்துள்ளது எனக் கூறி இந்தியப் பொம்மை உற்பத்தி துறையைப் பாராட்டியுள்ளார்.

மேலும் படிக்க

TNAU | சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் டி5 சூரணம்!

SBI Banking: Whats App-லயே SBI வங்கிச் சேவை தொடக்கம்!

English Summary: Agri News: PM-Kisan | Prime Minister's promises for farmers! Published on: 01 August 2022, 02:20 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.