Horti Utsav 2022 நாளைக் கோயம்புத்தூரில் தொடக்கம், PM ஃபசல் பீமா யோஜனா குறித்து வெளியான அதிர்ச்சி தகவல், கால்நடைகளைத் தாக்கும் குடற்புழுக்களுக்கு மூலிகை வைத்தியத்தில் தீர்வு முதலான வேளாண் செய்திகளின் தொகுப்பை இப்பதிவு வழங்குகிறது.
Horti Utsav 2022 நாளைக் கோயம்புத்தூரில் தொடக்கம்!
தோட்டக்கலைத் துறையின் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் எதிர்காலத் திட்டமிடல்கள் உள்ளிட்ட அறிவுசார், கலாச்சார நடவடிக்கைகளை எடுத்துரைக்கும் நோக்கில் Horti Utsav 2022 விழா கோயம்புத்தூரில் நாளை நிகழவுள்ளது. இவ்விழாவை கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை ஆராய்ச்சி பல்கலைக்கழகம் மற்றும் 5 தோட்டக்கலை கல்லூரிகள் இணைந்து நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
PM ஃபசல் பீமா யோஜனா குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!
பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) திட்டத்தின் கீழ் பட்டியல் சாதி விவசாயிகளின் பாதுகாப்பு அடிப்படையில் தமிழ்நாடு மோசமாக செயல்படுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் இணையதளத்தில் உள்ள தரவுகளின் படி, முந்தைய மூன்று ஆண்டுகளான 2019 முதல் 2021 வரையில், காரீஃப் மற்றும் ரபியில் என இரண்டு சாகுபடி பருவங்களிலும் பதிவு செய்த விவசாயிகளில் 1% க்கு மேல் பட்டியல் சாதி மக்களின் பங்கு இல்லை எனத் தெரியவந்துள்ளது.
கால்நடைகளைத் தாக்கும் குடற்புழுக்களுக்கு மூலிகை வைத்தியத்தில் தீர்வு!
அக ஒட்டுண்ணிகள் என அழைக்கப்படும் குடற்புழுக்கள் இளங்கன்றுகளை தாக்கும். குறிப்பாக, 'ஆம்பிஸ்டோமியாஸிஸ்' என்னும் நோயால் புழுக்கள் வளர்ந்து, சிறு குடலை சேதப்படுத்தும். இதுபோன்ற நேரங்களில், போதி மற்றும் உடற்சோர்வு ஏற்படும். இந்த தாக்குதலில் இருந்து மீழ மூலிகை வைத்தியமே போதும் என்கிறாஅர், செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் கால்நடை மருத்துவ பல்கலை உதவி பேராசிரியர், திரு. ரா. துரைராஜன். மேலும், விவரங்களுக்கு 8098122345 என்ற எண்ணிற்கு அழைத்துத் தகவல்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
ஆவின், தயிர், பால் உள்ளிட்ட உப பொருட்கள் விலை உயர்வு!
தமிழகத்தில் ஆவின் தயிர், நெய் உள்ளிட்ட பால்பொருட்கள் விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டதன் காரணமாக ஆவின் தயிர் மற்றும் நெய் விலையை உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவித்து உள்ளது. ஒரு லிட்டர் நெய்க்கு 50ரூபாயும் , ஒரு லிட்டர் தயிருக்கு 10 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. 100 கிராம் தயிரின் விலை 10 ரூபாயில் இருந்து 12 ஆகவும், 200 கிராம் தயிர் விலை 25 லிருந்து 28 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. பாக்கெட்டில் கிடைக்கக் கூடிய அரை லிட்டர் தயிர் 30 ரூபாயில் இருந்து 35 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் 15-ஆவது குடியரசு தலைவராக திரவுபதி முர்மு தேர்வு!
நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு தேர்வானார். கடந்த திங்கட்கிழமை குடியரசு தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் 37% வாக்குகள் வித்தியாசத்தில் திரவுபதி முர்மு வெற்றி பெற்றிருக்கிறார். குடியரசு தலைவர் பதவி ஏற்பு விழா வரும் 25-ஆம் தேதி நிகழ இருக்கிறது. இந்நிலையில் பழங்குடியின வகுப்பை சேர்ந்த முதல் ஜனாதிபதி என்னும் சிறப்பைப் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை - மாமல்லபுரம் இலவச பேருந்து சேவை!
மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்ட் 10-ந்தேதி வரை நடக்க இருக்கிற செஸ் ஒலிம்பியா போட்டியை முன்னிட்டு, சென்னையில் இருந்து மாமல்லபுரத்திற்கு இலவச பேருந்து சேவையைத் தமிழக அரசு அறிமுகப்படுத்துகிறது. இந்த இலவசப் பேருந்துகளைத் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இயக்குகிறது. வருகிற 25-ந்தேதி முதல் 5 பேருந்துகள் மாமல்லபுரத்துக்குப் புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
அரசு பள்ளிக்கு ரூ. 15 லட்சத்தில் பேருந்து! அசத்திய மாணவர்கள்!!
அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்! இனி வீட்டிலிருந்தே வேலை செய்யலாம்!!
Share your comments