காய்கறி பயிரிட ரூ. 15,000 மானியம் அறிவிப்பு!
மத்திய, மாநில அரசுகள் தோட்டக்கலைத் துறை சார்பாகக் காய்கறிகளைப் பயிரிட பல்வேறு மானியத் திட்டங்களை அறிமுகப்படுத்திச் செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின்கீழ் Hydroponics Farming என்ற அழைக்கப்படும் குழாய்கள் மூலம் காயிகறிகளான தக்காளி, வெள்ளரி மற்றும் கீரைகள் முதலான பயிர்களுக்கு 50% மானியத்தினையும், 15,000 ரூபாயினை பின்னேற்பு மானியமாகவும் வழங்கப்பட இருக்கிறது. இந்த குழாய்கள் மூலம் காய்கறி பயிரிடுவதில் பூச்சி மற்றும் நோய் பாதிப்பு குறைவு எனவும், களைகள் இம்முறையில் கிடையாது எனவும், தொழில் செய்யும் செலவு குறைவு எனவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: இனி Whatsapp-இல் உங்கள் குரலையும் ஸ்டேட்டஸ் வைக்கலாம்!
ஆவின் நிறுவனத்தில் தள்ளுபடி விற்பனை அறிவிப்பு!
ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு ஆவின் இனிப்பு வகைகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட இருப்பதாக விழுப்புரம் ஆவின் நிறுவனப் பொது மேலாளர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார். இனிப்பு வகைகள் ஆவின் பாலகங்கள், சில்லரை, மொத்த விற்பனையாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், வங்கிகள், தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள், சர்க்கரை ஆலைகள் போன்ற பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்குத் தள்ளுபடி விலையில் ஆவின் இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்பட உள்ளது. நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் மொத்தமாகவும், சில்லரையாகவும் இனிப்பு வகைகளைப் பெறுவதற்கு 18004253271 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Amazon, Flipkart-இல் 85% தள்ளுபடி ஆஃபர்கள்!
தமிழகத்தில் 20 பாரம்பரிய நெல் ரகங்கள் மீட்பு!
தமிழ்நாட்டில் சமுதாய வங்கிகள் மூலம் 20 பாரம்பரிய நெல் ரகங்கள் கண்டறியப்பட்டு, மீட்கப்பட்டுள்ளது. அரியலூர், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், உட்பட 24 மாவட்டங்களில் உள்ளூர் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் விருப்பமுள்ள விவசாயிகளைக் கண்டறிந்து சமூக விதை வங்கிகள் மூலம் ஊக்குவிக்கப்படுகின்றனர். பாரம்பரிய நெல் விதை வங்கிகளை வலுப்படுத்த ஒவ்வொரு பயனாளிக்கும் ரூ.2000 வழங்கப்படுகிறது. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் பாரம்பரிய ஆராய்ச்சி மற்றும் முன்முயற்சி திட்டத்தின் ஆதரவுடன் பாரம்பரிய அரிசி வகைகளுக்கு புத்துயிர் அளித்து, பாதுகாத்து, வகைப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை உயர்த்த அறிவுறுத்தல்!
நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை குறைந்தபட்சம் 21% வரை உயர்த்த வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வலியுறுத்தியுள்ளார். அதோடு, தமிழக முதல்வர் நேரடியாக இதில் தலையிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது பெய்யும் மழையினால் நெல்லின் ஈரப்பதம் 20 லிருந்து 25 சதவீதம் வரை உள்ளது. இந்த நிலையில், நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை குறைந்தபட்சம் 21 % வரை உயர்த்த வேண்டும் என்று டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி எக்ஸ்போ 2022 இன்று தொடக்கம்!
Renewable Energy India Expo 2022 என்று அழைக்கப்படும் இந்தியப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி எக்ஸ்போ 2022 இன்று தொடங்கியது. இது தில்லி, க்ரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ செண்டரில் நடைபெற்று வருகிறது. இந்த எக்ஸ்போ-வில் உலகச் சந்தை துறையை மேம்படுத்துவதற்கு மதிப்புமிக்க அனுபவம் வாய்ந்த வல்லுநர்களைக் கொண்டு புதிய உத்திகளை வழங்க வல்லுநர்கள் ஒன்றிணைகின்றனர். இன்று தொடங்கப்பட்ட இந்த வர்த்தகக் கண்காட்சி எக்ஸ்போ வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
பயிகளுக்கான இந்தியாவின் 42-வது தேசிய மாநாட்டுப் பொதுக்கூட்டம்: கலந்துகொண்டனர் இந்திய வேளாண் அமைச்சர்கள்
பயிர்களுக்கான இந்தியாவின் 42-வது பொதுக்கூட்டம் மற்றும் தேசிய மாநாட்டிற்கான குழுக் கூட்டம் நடைபெற்றது. இது இந்திய விவசாயத்தின் நிலையான வளர்ச்சி எனும் பொருண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ராஜஸ்தான் மாநிலத்தின் விவசாய அமைச்சர் கைலாஷ் சௌத்ரி, உத்தர்பிரதேச அமைச்சர் சூர்ய பிரதாப் சகி, தெலுங்கான அமைச்சர் நிரஞ்சன் ரெட்டி, கர்நாடக அமைச்சர் பி.சி. படில், மத்திய பிரதேச அமைச்சர் கமல் படேல் உடபட பல மாநிலங்களின் வேளாண்துறை அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் கிரிஷி ஜாக்ரன் குழு மீடியா பாட்னராக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாய உபகரணங்களின் உச்சி மாநாடு 2022 இன்று தொடக்கம்!
அதிகரித்து வரும் பண்ணை இயந்திரமயமாக்கல் போக்குகளின் விளைவாக, கடந்த சில ஆண்டுகளில் விவசாய உபகரணங்கள் மற்று விவசாயச் சந்தை வலுவான வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்த நிலையில் விவசாய உற்பத்தியில் பயன்படக்கூடிய இயந்திரங்களைப் பெற எளிதாகக் கடன் கிடைக்க வழிவகை செய்தல், விவசாய உற்பத்தியை அதிகரித்தல், கிராமப்புற வருமானத்தைப் பெருக்கும் வழிகளைக் கூறுதல் ஆகியவைகளை நோக்கமாகக் கொண்டு farm equipmet summit 2022 என்றழைக்கப்படும் விவசாய உபகரணங்களின் உச்சி மாநாடு இன்று தில்லியில் உள்ள பிக்காஜி காமா ப்ளேஸ்-இல் நடைபெற்றது.
இன்றைய வானிலை தகவல்கள்
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகப் பகுதிகளில் நிலவும் வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி காரணமாகத் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும். மேலும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை செய்ய வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, விவசாயிகள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் படிக்க
வேளாண் செய்திகள்: விவசாயத்திற்கு உரப் பற்றாக்குறையா? ஆட்சியர் விளக்கம்!
Share your comments