ஒட்டன் சத்திரத்தில் மாபெரும் விவசாயக் கண்காட்சி: செப்டம்பரில் தொடக்கம், 100 அடியைத் தாண்டிய பவானிசாகர் அணை: பாசனத்திற்கு நீர் திறப்பு, புத்தொழில் நிறுவனங்கள் கருத்தரங்கு: தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின், சிலிண்டருக்கு ரூ. 200 மானியம்: பஜக மாநில துணைத்தலைவர் நாரயணன் திருப்பதி அறிவிப்பு, அரசு பேருந்துகளில் பார்சல் சேவை: நாளை முதல் தொடக்கம், IRCTC ரயில்களில் பிளாஸ்டிக் பொருட்களில் தடை: புதிய நெறிமுறைகள் வெளியீடு முதலான தகவல்களைக் குறித்து இப்பதிவு விளக்குகிறது.
ஒட்டன் சத்திரத்தில் மாபெரும் விவசாயக் கண்காட்சி: செப்டம்பரில் தொடக்கம்!
பச்சை பூமியின் மாபெரும் விவசாயக் கண்காட்சி வரும் செப்டம்பரில் நிகழ உள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. ஒட்டன்சத்திரம், பழனி சாலையில் உள்ள அபி மஹாலில் நடைபெரும் இக்கண்காட்சி செப்டம்பர் 16,17, 18 ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை நிகழ உள்ளது. மூன்று நாட்கள் நடைபெற இருக்கும் இந்த கண்காட்சியில், விதைகள், நாற்றுகள், உரங்கள், கருவிகள், அரசு திட்டங்கள் குறித்த அரசு வல்லுநர்களின் ஆலோசனைகள் ஆகியவை இடம்பெற இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: TNPSC: நில அளவர்-வரைவாளருக்குத் தேர்வு: 1089 காலிப்பணியிடங்கள்!
100 அடியைத் தாண்டிய பவானிசாகர் அணை: பாசனத்திற்கு நீர் திறப்பு!
பவானிசாகர் அணை28-வது முறையாக 100 அடியைத் தாண்டி கடல் போன்று காட்சி அளிக்கிறது. பவானிசாகர் அணையின் நீர்பிரிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணையில் காளிங்கராயன் பாசனத்திற்காக 600 கன அடி நீர் திறந்து விட்டபட்ட நிலையில் இன்று 100 கன அடி நீர் குறைத்து 500 கன அடி விதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: தருமபுரி ஆட்சியர் அறிவிப்பு!
புத்தொழில் நிறுவனங்கள் கருத்தரங்கு: தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினைத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சார்பாக நடைபெற்றுவரும் இந்த புத்தொழில் கண்காட்சியில் புத்தொழிலைத் தொடங்கும் 31 பேருக்கு தலா 5 லட்சம் ஆதார நிதியை முதல்வர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு பேருந்துகளில் பார்சல் சேவை: நாளை முதல் தொடக்கம்
அரசு விரைவு போக்குவரத்துக் கழக வருவாயைப் பெருக்கும் வகையில், நாளை முதல் 'பார்சல்' சேவை துவக்கப்பட உள்ளது. உதிரி பாகங்களின் விலை ஏற்றம், டீசல் விலை உயர்வு, ஊழியர்களின் சம்பள உயர்வு, பஸ் கட்டணம் உயர்த்தப்படாதது, இலவச போக்குவரத்து அனுமதி உள்ளிட்ட காரணங்களால், அரசு போக்குவரத்து கழகங்கள், தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இந்த நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில், பஸ் நிலையங்களில் வணிக வளாகங்கள் கட்டுவது, நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள போக்குவரத்துக் கழக நிலையங்களில் பெட்ரோல் 'பங்க்'குகளை அமைப்பது, வெளியூர், வெளி மாநிலங்களுக்கு செல்லும் விரைவு பஸ்களில் கூரியர், பார்சல் சேவையை அனுமதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடக்கமாக, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில், முக்கிய நகரங்களில் இருந்து, சென்னைக்கு பார்சல் சேவை துவக்கப்பட இருக்கிறது.
சிலிண்டருக்கு ரூ. 200 மானியம்: பஜக மாநில துணைத்தலைவர் நாரயணன் திருப்பதி அறிவிப்பு
மத்திய அரசு ஒவ்வொரு சிலிண்டருக்கும் ரூபாய் 200 மானியமாக மக்களின் வங்கி கணக்கில் செலுத்தி வருகிறது என பாஜக மாநில துணைதலைவர் நாரயணன் திருப்பதி கூறியிருப்பதை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். உஜ்வாலா திட்டத்தின் கீழ் இணைப்பு பெற்றுள்ள பணியாளர்களுக்கு ஒவ்வொரு சமையல் சிலிண்டருக்கும் 200 ரூபாய் மானியம் வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு கடந்த மே மாதம் அறிவித்துள்ளது. இதனால் 6,100 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் என்று மத்திய நிதி அமைச்சரின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு பெற்றுள்ள சுமார் 9 கோடி பேருக்கு மட்டுமே இந்த மானியமானது வழங்கப்பட உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
IRCTC ரயில்களில் பிளாஸ்டிக் பொருட்களில் தடை: புதிய நெறிமுறைகள் வெளியீடு
IRCTC விரைவில் இந்திய ரயில்வேயின் கேட்டரிங் துறையிலிருந்து பிளாஸ்டிக் பொருட்களைத் தடை செய்ய உள்ளது. பிளாஸ்டிக்-ஆல் தட்டுகள், கரண்டிகள், கோப்பைகள், கண்ணாடிகள், பார்சல் பாக்ஸ்கள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் போன்றவை விரைவில் மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் கடந்த மாதம் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: காரையார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு
வளிமண்டலச் சுழற்சி காரணமாக, நேற்று தமிழ்நாடு, புதுவை காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசாந்து முதல் மிதமான மழை பெய்தது. அதிலும் குறிப்பாக, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களிலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் காரையார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது. எனவே, விவசாயிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் படிக்க
Share your comments