1. செய்திகள்

TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான விடைகள் வெளியீடு!

Poonguzhali R
Poonguzhali R
TNPSC: Group 4 Exam Answer Key Released!

குரூப் 4 எழுத்துத் தேர்வுக்குரிய உத்தேச விடைகளை டிஎன்பிஎஸ்சி (TNPSC) வெளியிட்டது. தேர்வு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து தேர்வர்கள் இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 (TNPSC Group 4) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த மாதம் ஜுலை 24ம் நாள் நடைபெற்றது. 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் 7,000க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர்

இந்த நிலையில், குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கான உத்தேச விடைகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு இருக்கிறது. இந்த உத்தேச விடைகளில் ஏதேனும் தவறு உள்ளது என்று கருதினால், விண்ணப்பதாரர் மேல்முறையீடு செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: PM-Kisan | விவசாயிகளுக்கான பிரதமரின் வாக்குறுதிகள்!

 

தேர்வாணைய இணையதளத்தில் உள்ள 'Answer Key Challenge' என்ற சாளரத்தைப் பயன்படுத்தி முறையீடு செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக, வரும் 8ம் தேதி மாலை 5.45 மணிக்குள் செய்தல் வேண்டும். அதன்பின், இச்சேவை முற்றிலும் நிறுத்தப்படும். ஒருவர் எத்தனை கேள்விகளையும் மறுக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இருப்பினும், தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் மட்டுமே இந்த வசதியை கோர முடியும்.

மேலும் படிக்க: SBI Banking: Whats App-லயே SBI வங்கிச் சேவை தொடக்கம்!

சரியான விடையைக் கோர விரும்பினால் விண்ணப்பதாரர், டிஎன்பிஎஸ்சி இணையத்தளத்தில் தனது பதிவெண், விண்ணப்ப எண், பிறந்த தேதி, தேர்வு பாடத்தின் பெயர், வினா எண் உள்ளிட்ட விவரங்களை அளித்தால் போதுமானது ஆகும்.

மேலும், உத்தேச விடைகளை மறுத்துத் அவரவர் சுட்டிக் காட்டும் சரியான விடைக்கான/விடைகளுக்கான ஆதாரமாக இருக்கும் புத்தகத்தின் விவரங்களையும் கண்டிப்பாக பதிவேற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

TN CM Scheme: புதுதொழில் நிறுவனங்களுக்கு ரூ. 5 லட்சம் நிதி!

கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: தருமபுரி ஆட்சியர் அறிவிப்பு!

English Summary: TNPSC: Group 4 Exam Answer Key Released! Published on: 02 August 2022, 04:00 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.