ITOTY-இன் சிறந்த டிராக்டர் நிறுவனத்திற்கான விருது விழா, PM Kisan: 12-வது தவணை எப்போது வரும்? வெளியானது புதிய அப்டேட், விவசாயிகளுக்கு இடுபொருள் வாங்க ரூ. 1 கோடி ஒதுக்கீடு, காளாண் வளர்ப்பு குறித்த 2 நாள் பயிற்சி, AJAI - இந்தியாவின் வேளாண் பத்திரிக்கையாளர் சங்கதின் லோகோ வெளியீடு முதலான வேளாண் செய்திகள் இப்பகுதியில் விளக்கப்படுகின்றன.
ITOTY-இன் சிறந்த டிராக்டர் நிறுவனத்திற்கான விருது விழா!
கடந்த 2019 தொடங்கப்பட்ட ITOTY என்ற அழைக்கப்படும் Indian Tractor of the Year ஒவ்வொரு ஆண்டும் சிறந்த டிராக்டர் தயாரிப்புகளுக்கு விருது வழங்கிச் சிறப்பித்து வருகின்றது. கடந்த ஆண்டு 2021-ற்கான Indian Tractor of the Year விருது சோனாலிகா டைகர் 55- க்கு வழங்கப்பட்டது. நடப்பு ஆண்டிற்கான விருது விழா இன்று நடைபெறுகிறது.
PM Kisan: 12-வது தவணை எப்போது வரும்? வெளியானது புதிய அப்டேட்
நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6000-ஐ மூன்று தவணையாகப் பிரித்து வழங்கும் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் அடுத்த தவணை எப்போது வரும் என்ற தகவல் வெளிவந்துள்ளது. PM Kisan திட்டத்தின் 12-வது தவணை வரும் செப்டம்பர் 1-ஆம் தேதிக்குப் பின் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுளது.
விவசாயிகளுக்கு இடுபொருள் வாங்க ரூ. 1 கோடி ஒதுக்கீடு
விழுப்புரம் மாவட்டத்தில் புரதச்சத்து அதிகம் உள்ள பயறு வகைகளின் சாகுபடியை அதிகரிக்க நடப்பாண்டில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம், பயறு வகைகள் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள் மற்றும் இடுபொருட்கள் வழங்கிட முடிவு செய்துள்ளது. இதற்கென ரூ. 1 கோடி நிதியை ஒதுக்கி உள்ளது. உயிர் உரம் 3,398 எக்டருக்கும், நுண்ணூட்டக்கலவை உரம் 700 எக்டருக்கும் 50 சதவீத மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது. பயிர் பாதுகாப்பு மருந்து விநியோகத்திற்கு, பின்னேற்பு மானியமாக 400 எக்டருக்கு 50 சதவீத மானியம் வழங்கப்பட உள்ளது.
காளாண் வளர்ப்பு குறித்த 2 நாள் பயிற்சி வகுப்புகள்!
ஈரோட்டில் உள்ள Myrada வேளாண் அறிவியல் நிலையத்தில், காளான் வளர்ப்பு மற்றும் மதிப்புக்கூட்டுப் பொருட்கள் தயாரிப்பு குறித்த 2 நாள் பயிற்சி நடைபெறவுள்ளது. ஜூலை 26 மற்றும் 27-ஆம் தேதிகளில் நடைபெற உள்ள இந்த பயிற்சி முகாமில் உழவர்கள், பெண்கள், இறுதி ஆண்டு பட்டதாரி மாணவர்கள், பட்டதாரிகள், இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோரும் கலந்துகொண்டு பயன்பெறலாம். காளான் வளர்ப்பு மற்றும், காளான் மதிப்புக்கூட்டுப் பொருட்கள் தயாரிப்பு, அதனை சந்தைப்படுத்துதல் பற்றிய அனைத்து தகவல்கல் ஒருங்கிணைந்து வழங்கப்பட இருக்கிறது.
AJAI - இந்தியாவின் வேளாண் பத்திரிக்கையாளர் சங்கதின் லோகோ வெளியீடு
AJAI என்று அழைக்கப்படும் இந்தியாவின் வேளாண் பத்திரிக்கையாளர் சங்கம், தனது லோகோ மற்றும் தனது அதிகாரப்பூர்வத் தளத்தை ஜூலை 21-ம் தேதி புதுதில்லையில் வெளியிடுகிறது. இந்நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் கோதாபாய் ரூபாலா வருகை தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிஷி ஜாக்ரனின் "Farmer The Journalist” நிகழ்ச்சி தொடக்கம்!
கிரிஷி ஜாக்ரனின் லட்சியத் திட்டமான "Farmer The Journalist” நிகழ்வு இன்று சிறப்புற நடைபெற்றது. விவசாயிகளுக்கான வழிகாட்டுதல்களை வழங்கும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல்வேறு விவசாயிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். ஆன்லைனில் நடைபெற்ற இந்த Webinar Session-ஐக் கிரிஷி ஜாக்ரன்-இன் Founder & chief Editor திரு எம்.சி.டாம்னிக் தலைமையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அரிசி, கோதுமை, தயிருக்கான ஜிஎஸ்டி கட்டணம் ரத்து!
அரிசி, கோதுமை, தயிர் போன்றவற்றுக்கு விதிக்கப்பட்ட 5 சதவீத ஜிஎஸ்டி வரி தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அரிசி, பால், தயிர் போன்ற அத்தியாவசிய பொருட்களின் ஜி.எஸ்.டி வரி விகிதத்தை உயர்த்தி 47வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, இந்த புதிய வரி விதிகள் நேற்று அமலுக்கு வந்தது. இந்நிலையில் அரிசிக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதை கண்டித்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அரிசி ஆலைகள்,கடைகளை அடைத்து போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், அரிசி, கோதுமை, தயிர் போன்றவற்றுக்கு விதிக்கப்பட்ட 5 சதவீத ஜிஎஸ்டி வரி தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.
வானிலை தகவல்கள்
தமிழகத்தில் சில இடங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
Share your comments