உளுந்து விதைகளை 50 சதவீத மானியத்தில் பெறலாம்
சேலம் மாவட்டம், ஆத்தூர் உதவி வேளாண்மை அலுவலர் பெ.பெரியசாமி: தற்போது உளுந்து சாகுபடி செய்யவுள்ள விவசாயிகள் ஆத்தூர் வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலகத்திற்கு நேரில் வந்து உளுந்து விதைகளை 50 சதவீதம் மானியத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் உளுந்து சாகுபடி செய்து, விதை பண்ணை நமது துறையின் மூலம் அமைத்து, உளுந்து விதைகள் கொள்முதல் செய்யப்படும். மேலும் உளுந்து விதைகளை உற்பத்தி செய்து விவசாயிகள் வழங்குவதற்கு உற்பத்தி கொள்முதல் மானியமும் அரசால் வழங்கப்படுகிறது, ஆகவே இந்த வாய்ப்பினை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. என்ற செய்தியை வழங்கியுள்ளார்.
மேலும் படிக்க: NHAI ஆட்சேர்ப்பு 2022: BE படித்திருந்தால் மாதம் 39k சம்பளம்!
விவசாயிகளுக்கு தரமான விதை உற்பத்தி முறை பயிற்சி
மதுரை மாவட்டம், அலங்கா நல்லூர் வட்டாரம், வடுகபட்டி கிராமத்தில் மாவட்ட அளவிலான தரமான விதை உற்பத்தி பயிற்சி விதைச்சான்றுத் துறை மூலம் நடைபெற்றது. பயிற்சியில் தரமான விதையின் குணாதிசியங்கள், நெல் சாகுபடி முறைகள், குறுவைப் பருவத்தில் நெல் விதை உற்பத்தி செய்யும் போது பின்பற்ற வேண்டிய உழவியல் முறைகள் போன்ற பல வேளாண் தகவல்கள் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் 40 விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தேனீ வளர்ப்பு பற்றிய ஒரு நாள் பயிற்சி
இடம்: கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தில், பூச்சியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் தேனீ வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. எனவே வரும் ஜூலை மாதத்திற்கான பயிற்சி 06ஆம் 2022 புதன்கிழமை அன்று நடைபெறும், பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர், பயிற்சி நாளன்று காலை 9 மணிக்கு பூச்சியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு வந்து அடையாள சான்று சமர்பித்து பயிற்சிக் கட்டணம் ரூயாய் 590 மட்டும் நேரடியாக செலுத்த வேண்டும், பயிற்சியானது காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். பயிற்சியின் இறுதியில் சானிறிதழும் வழங்கப்படும்.
மின்னஞ்சல் : entomology@tnau.ac.in
தொலைபேசி: 0422-6611214
மேலும் படிக்க: கோழி வளர்ப்பை ஊக்குவிக்க 2022-இன் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம்
நோனி, தக்காளி மற்றும் பப்பாளியில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நோனி தக்காளி மற்றும் பப்பாளி பழத்திலிருந்து மதிப்பூட்டபட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி ஜூலை 6 மற்றும் 7 , 2022 ஆகிய நாட்களில் வரும் தலைப்புகளில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
- நோனி-பிளைன், நோனி-குவாஷ், நோனி - ஊறுகாய், நோனி ஜாம்
- தக்காளி - சாஸ், கேட்சப், பேஸ்ட், பியுரி
- பப்பாளி - ஜாம், ஸ்குவாஷ், கேண்டி
ஆர்வமுள்ளவர்கள் ரூ.1770/- (ரூ. 1500/- + GST 18%) - பயிற்சி முதல் நாளன்று செலுத்த வேண்டும். பயிற்சியானது, அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோயம்புத்தூரில் நடைபெறும்.
மேலும் படிக்க: KJ Choupal: திட்டக் கமிஷனின் முன்னாள் ஆலோசகர் டாக். சதாமேட் கிரிஷி ஜாக்ரனுக்கு வருகை
முதுநிலை ஆசிரியர் போட்டித் தேர்வு முடிவுகள் வெளியீடு.
முதுநிலை ஆசிரியர் போட்டித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது, கடந்த பிப்ரவரி மாதம் நடந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை 2 லட்சத்து 13 ஆயிரத்து 893 பேர் எழுதியுள்ளனர், எனவே தற்போது முதுநிலை ஆசிரியர் போட்டித் தேர்வு முடிவுகளை trb.tn.nic.in இணையதளத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தை ஸ்மார்ட் மாநிலமாக மாற்றுவதே அரசின் இலக்கு
தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.125 லட்சம் கோடி முதலீடுகளுக்கு 60 நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. இந்நிலையில், ரூ. 1,497 கோடி செலவில் 12 நிறுவனங்களின் புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டன. மேலும் தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களின் பட்டியலில் நம்முடைய மாநிலம் 3வது இடத்தை பிடித்துள்ளது என்ற செய்தி மிகப்பெரிய வரலாற்று சாதனையாக அமைந்துள்ளது.
மேலும் படிக்க: FMC-இந்தியா: கரும்பு விவசாயிகளுக்கான பிரேத்யேக தயாரிப்பு
இன்றைய வானிலை அறிக்கை மற்றும் மீனவர்களுக்கான தகவல்
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தமிழக - ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே இவ்விடங்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் படிக்க:
இலக்காகிய மீன்களில் காணப்படும் பொதுவான அறிகுறிகள் மற்றும் காரணிகள்
வாருங்கள் விதைபோல் முளைத்தெழுவோம்! விருட்சங்களை உருவாக்குவோம்
Share your comments