கோயம்புத்தூர்: ‘அமுதம்’ திட்டத்தை துவக்கி வைத்தார், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்நிகழ்வில் பேசிய அவர், மக்கள் பிரச்னைகளை புரிந்துகொண்டு தீர்வுகளை வழங்கும் எம்எல்ஏக்களை பெற, மாநிலம் முழுவதும் உள்ள வாக்காளர்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
திங்கட்கிழமை, கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் 'அமுதம்' என்ற திட்டத்தை துவக்கி வைத்தார். பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் இரண்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவச பால் விநியோகம், இத்திட்டத்தின் நோக்கமாகும்.
கோவை தெற்கு தொகுதி, மொடக்குறிச்சி மற்றும் கொங்கு மண்டலம் மட்டும் பாஜகவுக்கு வாக்களித்தால் போதாது, மாநிலம் முழுவதும் உள்ள வாக்காளர்கள் பாஜகவுக்கு வாக்களித்தால் தான், பாஜக எம்எல்ஏக்கள் உங்கள் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதற்கும், சிறிய முதல் பெரிய பிரச்சனைகள் வரை தீர்வு வழங்குவதற்கும் எளிதாக இருக்கும் என்றார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைத்த திருமதி சீனிவாசனைப் பாராட்டிய திருமதி சீதாராமன், தண்ணீர் விநியோகம், மோசமான சாலைகள் போன்ற வழக்கமான பிரச்சினைகளைத் தாண்டி, தனது தொகுதியில் வாக்காளர்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதைப் பார்த்து உழைக்கும் எம்.எல்.ஏ என பாராட்டினார்.
இதுவே அம்மாவின் மனதுடன் பிரச்சினைகளை ஆராய்ந்து பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களை மற்றவர்களிடமிருந்து ஒதுக்கி, கட்சிக்கு வாக்களிக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியது என்றும், இந்த ‘அமுதம்’ திட்டம் வலுப்பெறும் என்றும் கூறினார். பிரதம மந்திரியின் போஷன் அபியான் திட்டம், தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு முழுமையான ஊட்டச்சத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.
பாஜக எம்எல்ஏக்கள், தாய் உள்ளம் கொண்டு மக்களின் பிரச்சனைகளைப் பார்த்து, ஆராய்ந்து புரிந்துக்கொண்டு, தகவல்களை சேகரித்து, கட்சிக்கு வாக்களித்த மக்களுக்காக வேண்டிய தேவைகளை பூர்த்தி செய்கின்றனர் என சுட்டிக்காட்டினார், நிர்மலா சீதாராமன். மேலும், தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு முழுமையான ஊட்டச்சத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட பிரதம மந்திரியின் போஷன் அபியான் திட்டத்தை வலுப்படுத்த, இந்த ‘அமுதம்’ திட்டம் தொடரும் என்றும் அவர் கூறினார்.
அக்கம் பக்கத்திலுள்ள அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்துள்ள பாலூட்டும் தாய்மார்கள், ஒரு நாளைக்கு 250மிலி பசும்பால் பாக்கெட் பெற தகுதியுடையவர்கள் என்று திருமதி சீனிவாசன் கூறினார். மையங்களில் பதிவு செய்யாத பெண்களும் தகுதியுடையவர்களாக இருப்பார்கள் மற்றும் அவர்களை மையங்களில் பதிவு செய்ய, அவரது சமூகநலப் பிரிவான மக்கள் சேவை மையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள்:
பாலூட்டும் தாய்மார்கள் அல்லது கைக்குழந்தைகள், ஒரு பாக்கெட்டைப் பெறுவதற்கு அருகிலுள்ள மளிகைக் கடைகளில் காட்டக்கூடிய அட்டையைப் பெறுவார்கள் என்று திருமதி சீனிவாசன் தெரிவித்தார். கொங்கு மண்டல கிராமங்களில் பாலூட்டும் தாய்மார்கள் 'குழந்தைகளுக்கு பால்' வாங்கி கொடுக்க கஷ்டப்படுவதைப் பார்த்து, இவ் யோசனையைப் பெற்றதாகவும் கூறினார், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.
பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை, கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி பாஜகவின் இரும்புக் கோட்டை என்றும், இத்திட்டத்தை வெற்றிபெறச் செய்ய முன்வந்த அனைவரையும் பாராட்டுவதாகவும் கூறினார் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க:
தமிழகம்: தென் சென்னையில் மே 11ம் தேதி மேட்ரோவாட்டர் சேவை தடைபடும்
இட்லி அம்மாவுக்கு வீடு பரிசளித்த ஆனந்த் மஹிந்திரா! யார் இவர்?
Share your comments