Pongal Gift
பொங்கல் பண்டிகையை கொண்டாட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கப்பணம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் ஜனவரி 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெறும். முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை ஜனவரி 9ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்க உள்ளார்.
தமிழக அரசின் அறிவிப்பு
பொங்கல் பரிசு மற்றும் ரொக்க பணத்தை விற்பனை இயந்திரம் மூலம் கைரேகை சரிபார்ப்பு முறைப்படி வழங்கப்பட வேண்டும். அங்கீகார சான்று வழங்கியதன் வாயிலாக அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மூலம் பொருட்கள் பெறும் அட்டைதாரர்களுக்கு பதிவேட்டில் உரிய நபர்களின் ஒப்பம் பெற்று, பொங்கல் பரிசு வழங்கலாம்.
தொழில்நுட்ப இடையூறு உள்ளிட்ட காரணங்களால் கைரேகை சரிபார்ப்பு பணி சரிவர மேற்கொள்ளப்பட இயலாத நேரத்தில் அதற்குரிய பதிவேட்டில் உரிய ஒப்பம் பெற்று பொங்கல் பரிசு மற்றும் ரொக்க பணம் வழங்க வேண்டும்.
எந்த காரணங்களை முன்னிட்டும், தகுதியான பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு மற்றும் பணம் வழங்கப்படாமல் இருப்பதை ரேஷன் கடை ஊழியர்கள் தவிர்த்திட வேண்டும்.
பொங்கல் பரிசு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டதும் அவர்களது செல்போனுக்கு மெசேஜ் அனுப்பப்படும். பொங்கல் பரிசு கொடுக்க ரேஷன் கடைகளை சரியான நேரத்தில் திறக்க வேண்டும்.
வரிசையில் காத்திருக்கும் அனைவருக்கும் பொங்கல் பரிசு கொடுக்க வேண்டும். வரிசையில் காத்திருந்தவர்களை திருப்பி அனுப்பக்கூடாது. பொங்கல் பரிசினால் பொது விநியோக திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும், அன்றாட பணிகளுக்கு எவ்வித குந்தகமும் ஏற்படாவண்ணம் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.
புகார் அளிக்க
பொங்கல் பரிசு மற்றும் ரொக்கத் தொகை வினியோகம் குறித்து, புகார் அளிக்க வேண்டுமானால் கட்டணம் இல்லா தொலைபேசி எண் 1967 மற்றும் 1800 425 5901 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
விவசாயிகளுக்கு ரூ.50 கோடி இடுபொருள் நிவாரணம்: தமிழக அரசு அறிவிப்பு!
Share your comments