பி.இ., பி.டெக் ஆகிய பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பப் பதிவு ஆன்லைனில் இன்று முதல் (ஜூன் 20) தொடங்கியது. இந்நிலையில் எங்கு விண்ணப்பிப்பது? எவ்வாறு விண்னப்பிப்பது குறித்த வழிமுறைகளை இப்பதிவு விளக்குகிறது.
பி.இ., பி.டெக் ஆகிய பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு அதன் அதிகாரப் பூர்வ இணையதளமான www.tneaonline.org என்ற இணையதளத்தில் ஜூலை 19ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: 2 ரூபாயில் ரூ. 36,000 பென்ஷன் பெறும் மத்திய அரசின் திட்டம்!
ஜூலை 20 முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் எனவும், ஜூலை 22ல் ரேண்டம் எண் வெளியிடப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்ததாக, ஆகஸ்ட் 8ல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அதன் பிறகு, ஆகஸ்ட் 16 முதல் அக்டோபர் 14 வரை ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! இன்றைய விலை நிலவரம்!!
மாணவர்கள் அவர்கள் பயின்ற கல்வி வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. மாவட்டம்தோறும் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் வாயிலாகவும் மாணவர்கள் பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணபிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த செயல்முறைக்கு என 55 மையங்கள் அமைக்கப்பட்ட நிலையில் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 110 மையங்களாக உயர்த்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ரேஷன் கடையில் இனி அரிசிக்கு பதிலாகக் கேழ்வரகு: தமிழக அரசு
கலந்தாய்வு என்று பார்த்தால் மாற்றுத் திறனாளி, முன்னாள் ராணுவ வீரர்கள், விளையாட்டு என அமைந்த 3 பிரிவுகளுக்கு ஆகஸ்டு 16 முதல் 18 வரையிலான தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, பிரிவு நிலையில் பார்த்தால் பொதுக் கல்வி, தொழில்முறை மற்றும் அரசு பள்ளி மாணர்களுக்கு 7.5% ஒதுக்கீட்டுடன் ஆகஸ்டு 22 முதல் அக்டோபர் 14ஆம் தேதிவரை நடைபெற இருக்கிறது. இறுதயாக துணைக் கலந்தாய்வு அக்டோபர் 15, 16 ஆகிய இரு தேதிகளில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: SI தேர்வு எழுதுவோருக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு?
இந்த நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான பிறகு மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களைக் கொண்டு பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க
அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! இன்றைய விலை நிலவரம்!!
பெண்களுக்காக அரசு கொடுக்கும் சிறப்புக் கடன்கள்: இன்றே அப்ளை பண்ணுங்க!
Share your comments