1. செய்திகள்

அடிக்கடி ரயிலில் செல்பவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Are you a frequent train commuter? A shock news for you!

Credit: Quartz

இந்தியாவின் ரயில் பயணிகள் இதுவரை அனுபவித்துவந்த ஒரு வசதியை, ரத்து செய்ய ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த முடிவு அடிக்கடி ரயிலில் பயணம் செய்வோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வைஃபை வசதி (WiFi facility)

மத்திய அரசு (Union Government) கடந்த சில ஆண்டுகளாகப் பயணிகளின் வசதிக்காக ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் வைஃபை வசதியை வழங்கி வருகிறது.

நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும் வைஃபை இணைப்பை வழங்கிய பிறகு, நாடு முழுவதும் ஓடும் ரயில்களில் இலவச வைஃபை வழங்குவதாக மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

பயனடைந்த பயணிகள் (Beneficial passengers)

வைஃபை வசதியால், ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள், தங்கள்  மொபைல் போனில், இணையதளவசதி இல்லாத நேரங்களில், தனது டிக்கெட்டிற்கு ஒதுக்கப்பட்ட இடம் உள்ளிட்டவற்றைத் தெரிந்து கொள்ள பெரிதும் உதவிகரமாக இருந்தது. குறிப்பாக கடைசி நேரப் பரபரப்பில் இருந்துத் தப்பித்துக்கொள்ளவும் பயன்பட்டது. 

நான்கரை ஆண்டுகள் (Four and a half years)

2019 ஆம் ஆண்டில், முன்னாள் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், நான்கரை ஆண்டுகளில் ரயில்களுக்குள் வைஃபை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தார்.

அதிரடியாக நீக்கம் (Dismissed in action)

ஆனால் அதில் பல சவால்கள் இருந்தன. இதன் காரணமாக இந்த திட்டம் தற்போது ரயில்வேயின் பணித்திட்டத்தில் இருந்தே நீக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இனிமேல் பயணிகளுக்கு வைஃபை சேவை கிடைக்காது.

இப்போது இந்த வைஃபை திட்டம் இந்திய ரயில்வே பணித்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டது.லாபகரமாக இல்லாததால், ரயில்களில் இணைய இணைப்பை வழங்கும் திட்டத்தை ரயில்வே நிறுத்தி வைத்துள்ளது.

நாடாளுமன்றத்தில் தகவல் (Information in Parliament)

இதை நாடாளுமன்றத்தில் அரசு உறுதி செய்தது.இது தொடர்பாக மக்களவையில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், அளித்த பதிலில், இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.

இனி வைஃபை கிடையாது (No more wifi)

அதாவது, பைலட் திட்டத்தின் கீழ், ஹவுரா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் செயற்கைக்கோள் தொடர்பு தொழில்நுட்பம் மூலம் அரசு வைஃபை இணைய வசதியை வழங்கி வந்தது. இந்த வசதி இனிமேல் பயணிகளுக்குக் கிடைக்காது.
இதன்மூலம் ரயில் பயணத்தின் போது இதுவரை கிடைத்து வந்த ஒரு வைஃபை வசதி இனிமேல் கிடைக்காது.

பயணிகள் அதிர்ச்சி (Passengers shocked)

ரயில்வேயின் இந்த அறிவிப்பு பயணிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இனிமேல் ரயில் நிலையங்களுக்கு வரும்போது, வைஃபை இல்லாதச் சூழலை எதிர்கொள்வது மிகவும் சிரமமாக இருக்கும் என பயணிகள் சிலர் அதிருப்தியுடன் தெரிவித்தனர். 

மேலும் படிக்க...

பருப்பு வகைகளில் இருப்பு: அதிகமாகும் சமையல் எண்ணெய் விலை

காகிதமில்லா முதல் பட்ஜெட்: கணினி மயமாகும் சட்டசபை!

English Summary: Are you a frequent train commuter? A shock news for you!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.