தமிழக அரசு "ஊரக கண்டுபிடிப்பாளர் விருது"எனும் விருதினை அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பங்களை வரவேற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கமும் வழங்கப்பட இருக்கிறது. இது குறித்த கூடுதல் தகவல்களை இப்போது பார்க்கலாம்.
ஊரகக் கண்டுபிடிப்பாளர் விருது என்பது கடந்த 2018-2019 ஆம் நிதியாண்டு முதல் தமிழகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதானது ஊரகப் புற மக்களின் அறிவுத்திறனை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, ஊரக மக்களின் அறிவுத்திறனை வளர்ப்பதோடு, பல பயனுள்ள புதிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொணரும் வகையில் இரண்டு சிறந்த ஊரக கண்டுபிடிப்பாளர்கள் தேர்வுசெய்யப்பட இருக்கின்றனர்.
தேர்ந்தெடுக்கப்படும் இரண்டு சிறந்த ஊரகக் கண்டுபிடிப்பாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், சான்றிதழும் வழங்கப்பட இருக்கிறது என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022-23 ஆம் நிதி ஆண்டிற்கான ஊரகக் கண்டுபிடிப்பாளர் விருதுக்கான விண்ணப்பங்கள் தற்பொழுது வரவேற்கப்படுகின்றன. விணப்பங்கள் மற்றும் விதி முறைகளை அதிகாரப்பூர்வ மற்றும் அறிவியல் நகர இணையதளமான www.sciencecitychennai.in எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை அந்தந்த மாவட்டத்தின் ஆட்சியர்கள் மூலமாக அரிவியல் நகரத்திற்கு வருகின்ற ஆகஸ்டு 30 ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்பி வைக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
குறைந்து கொண்டே வருகிறது மேட்டூர் அணை நீர் இருப்பு!
திருச்சியில் ஜுலை 27 முதல் 3 நாள் வேளாண் சங்கமம்! விவசாயிகளுக்கு அழைப்பு!
Share your comments