1. செய்திகள்

எஸ்பிஐ புதிய அறிவுப்பு: வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில் வரம்பற்ற ஏடிஎம் பயன்பாடு

KJ Staff
KJ Staff
SBI Banglore

பொதுத்துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில் பல சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் கட்டணமில்லாமல் எத்தனை முறை வேண்டுமானாலும் ஏடிஎம் பயன்படுத்தலாம் என அறிவுப்பு வெளியிட்டுள்ளது.

பெரும்பாலான மக்களால் பெரிதும் விரும்பப்படும் எஸ்பிஐ வங்கி நாளுக்கு நாள் புதுபுது திட்டங்களை அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் மினிமம் பேலன்ஸ் இல்லாத 5 புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியது, அதே போன்று மினிமம் பேலன்ஸ்  வைக்க இயலாத வடிக்கையாளர்களுக்கான அபராதத் தொகையை கணிசமாக குறைத்து.

எஸ்பிஐ யின் மற்றொரு புதிய அறிவிப்பினை வெளியிட்டது. அதில் வங்கிக்கணக்கில் மினிமம் பேலன்சாக ரூ.25,000க்கும் அதிகமாக வைத்திருப்பவர்களுக்கு வரம்பற்ற பணப்பரிவர்த்தனை (ATM) செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. 

SBI ATM

பணபரித்தவர்த்தனையில் மற்றியமைக்கப்பட்ட  அறிவிப்புகள்

பெரு நகரங்களில் ( சென்னை, மும்பை , டெல்லி ) வசிக்கும் வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்திற்கு 8 முறை ஏடிஎம்-இல் பணம் எடுத்துக்கொள்ளலாம்.  எஸ்.பி.ஐ ஏடிஎம்-இல் 5 முறையும், மற்ற வங்கி ஏடிஎம்-இல் 3 முறையும் பயன்படுத்தி கொள்ளலாம்.

மெட்ரோ அல்லாத நகரங்களில் ஏடிஎம் பயன்பாடு குறைவாகவே இருப்பதால் எஸ்.பி.ஐ வாங்கி ஏடிஎம்-இல் 5 முறை, மற்ற வங்கி ஏடிஎம்-இல் 5 முறை என மாதத்திற்கு 10 முறை ஏடிஎம் பயன்படுத்தி பணம் எடுத்துக் கொள்ளலாம் என கூறியுள்ளது.

மினிமம் பேலன்ஸ்  ரூ.25,000க்கும் குறைவாக வைத்திருப்பவர்கள் 8 முதல் 10 முறை மட்டுமே பயன்படுத்த இயலும். விதிமுறையைத் தாண்டி அதிக முறை பணம் எடுப்பவர்களுக்கு மட்டுமே ரூ. 5 -  20 வரை மற்றும் ஜிஎஸ்டி அபராத கட்டணமாக வசூலிக்க படும்.

ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக வங்கிக்கணக்கில் இருப்புத்தொகையை வைத்திருப்பவர்களுக்கு ஏடிஎம் பயன்பாட்டில் எவ்வித நிபந்தனையும் இல்லை.  எஸ்.பி.ஐ மற்றும் அனைத்து ஏடிஎம்-களிலும் பணம் எடுத்துக்கொள்ளலாம்.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: State Bank Of India Announced Unlimited ATM Usage To Their Customers

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.