1. செய்திகள்

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இந்த வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது

KJ Staff
KJ Staff

சிபிஎஸ் இபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகும்  என எதிர்பார்த்த  நிலையில், முடிவுகள் காலதாமதமாகும் என அறிவுப்பு வெளியானது. இம்முறை சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை மே மாதத்தில் வெளியிடுவததாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதே போல் மே  2 ஆம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டது. பன்னிரண்டாம் வகுப்பு முடிவுகளை வெளியிட்டது போல் முன்னறிவிப்பு ஏதுமின்றி வெளியீட்டு மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சியினை கொடுக்கும் என எதிர்பார்க்க படுகிறது.

தேர்வு முடிவுகளை முன்பாக அறிவிப்பதினால் மாணவர்கள் வேறு பள்ளிகளில் சேருவதற்கு அல்லது கல்லூரிகளில் சேருவதற்கு உதவியாக இருக்கும் என டெல்லி உயர்நீதி மன்றம் கேட்டு கொண்டது.  அதற்கு இணங்க இம்முறை முடிவுகளை முன்பாக அறிவிப்பதாக சிபிஎஸ்இ, இணையதளத்தில் செய்திகள் வெளியாகி இருந்தன. விடைத்தாள் சரிபார்க்கும் பணி கடந்த  ஏப்ரல் 20 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த மாதம் பிப்ரவரி  21 , ஆம் தேதி தொடங்கி மார்ச் 29 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தியா முழுவதிலுமிருந்து மொத்தம் 31 14 831 மாணவர்கள் தேர்வு எழுதி உள்ளனர். இதில் 18 19 077  மாணவர்கள், 12 95 754 மாணவிகள்மற்றும் 28 மூன்றாம்பாலிதினர் தேர்வு எழுதி உள்ளனர்.  கடந்த ஆண்டு  27 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி இருந்தனர் . தேர்ச்சி விகிதமானது  86.70% சதவீதமாக இருந்தது.

தேர்வுமுடிவுகளைஎவ்வாறுதெரிந்துகொள்வது ?

  • மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை பலவழிகளில் தெரிந்து கொள்ளலாம். சிபிஎஸ்இ இணையதளத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
  • சிபிஎஸ்இ மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம் இணைந்து மாணவர்கள் எளிதில் தெரிந்து கொள்ள ஆப் ஒன்றை வடிவமைத்துள்ளது. மாணவர்கள், பிளே ஸ்டோரில் சென்று இதனை  பதிவிறக்கம் மற்றும்  இன்ஸ்டால் செய்து தங்களது பதிவு எண், பள்ளி எண், பிறந்த தேதி உள்ளிட்ட விபரங்களை பதிவிட்டு, தங்களது மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்.
  • மாணவர்களுக்கு அவர்களது கைபேசி எண்ணிற்கு குறுச்செய்தியாக அனுப்பிவைக்கப்படும்.

மாணவர்கள் இணையதளம், கைபேசி போன்றவற்றின் மூலம் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

English Summary: CBSE 10th Results will Be Late: Plan To Announce Second Week Of May

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.