தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில நாட்களுக்கு கனமை பெய்யும் என 11 மாவட்டங்களின் பட்டியலை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது குறித்த தகவலை இப்பதிவு விளக்குகிறது.
மேற்குதிசை காற்றின் காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.
மேலும் படிக்க: TNEB: இலவச விவசாய மின் இணைப்புக்கு இன்றே விண்ணப்பியுங்கள்? விவரம் உள்ளே!
கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ்வழி இடஒதுக்கீடு சர்ச்சை!
சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மேலும் படிக்க: 7th Pay Commission: அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு! பெரிய ஏற்றம்!!
தற்பொழுது பதிவான மழையின் அளவு வருமாறு,
ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), கடலூர், திருவள்ளூர் தலா 5, சின்கோனா (கோயம்புத்தூர்), லால்பேட்டை (கடலூர்) புவனகிரி (கடலூர்), காட்டுமன்னார்கோயில் (கடலூர்), , திருவாலங்காடு (திருவள்ளூர்) , திண்டிவனம் (விழுப்புரம்) தலா 4 ஆகும்.
மேலும் படிக்க: தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்குத் தடை: அதிரடி உத்தரவு!
பூண்டி ( திருவள்ளூர் ) , அரக்கோணம் (ராணிப்பேட்டை), செஞ்சி (விழுப்புரம்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோயம்புத்தூர்), நடுவட்டம் (நீலகிரி), மேல் பவானி (நீலகிரி), மரக்காணம் (விழுப்புரம்) , திருப்பத்தூர், தாம்பரம் (செங்கல்பட்டு), சோளிங்கர் (ராணிப்பேட்டை) தலா 3 ஆகும்.
வானுர் (விழுப்புரம்), வாலாஜா (ராணிப்பேட்டை), ஆரணி (திருவண்ணாமலை), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), சீர்காழி (மயிலாடுதுறை), வேப்பூர் (கடலூர்), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), சோலையார் (கோயம்புத்தூர்), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), வந்தவாசி (திருவண்ணாமலை), தாமரைப்பக்கம் (திருவள்ளூர்), செங்கல்பட்டு, தலா 2 ஆகும்.
மேலும் படிக்க
தங்கம் மீதான இறக்குமதி வரி அதிகரிப்பு! தங்கம் விலை அதிகரிக்குமா?
Share your comments