1. செய்திகள்

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலையில் மாற்றம்! விலை நிலவரம் உள்ளே!

Deiva Bindhiya
Deiva Bindhiya

Change In Drastic Gold price! Price Status Inside!

கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் எதிரொலியால் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சரிவு காணப்பட்ட நிலையில், அதிரடி திருப்பமாக தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது, இன்று கணிசமாகவே தங்க விலை உயர்ந்திருக்கிறது, இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை நிலவரம் என்ன அறிந்துக்கொள்ளுங்கள்.

ஒரு நாள் போல் ஒரு நாள் இருப்பதில்லை என்ற பழைய சொலவடையுள்ளது. அந்த வகையில், தங்க விலை ஒரு நாள் குறைந்தால், அடுத்து வரும் நாட்களில் மிகப் பெரிய அளவில் உயர்ந்துவிடுகிறது. இதனால் நகை வாங்கும் மக்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். நேற்று விலைச் சரிவு இருந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்திருப்பது குறிப்பிடதக்கது. சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

சென்னையில் இன்று (பிப்ரவரி 15, 2022) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 4,696 ஆக விற்பனையாகிறது. அதே நேரம், 24 கேரட் தங்கம் ரூ. 5,123 ஆக உள்ளது. 8 கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கம் 8 ரூபாய் உயர்ந்து ரூ. 37,568 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

நேற்று 5,122 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் (24 கேரட்) தங்கம் இன்று 5,123 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதே நேரம், நேற்று 40,976 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் (24 கேரட்) தங்கம் 8 ரூபாய் உயர்ந்து 40,984 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கடந்த வாரம் முதல் நாள் மட்டுமே தங்கம் விலை குறைந்து காணப்பட்டது, அடுத்த நாள் முதல் ஏற தொடங்கிய தங்கம் விலை பிப்ரவரி 14 அன்று மீண்டும் குறைந்து ஆபரணத் தங்கம் 46,950 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று மீண்டும் தங்க விலையில் கணிசமான உயர்வை காண முடிகிறது.

தங்கம், மக்களின் இயல்பு வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பதாகும். விவசாயிகளும் தங்கம் வைத்து கடன் பெறுவதை எளிதென நம்புகின்றனர். விவசாயிகள் மட்டுமின்றி சிறு தொழில் முதல் பெருந் தொழில் செய்வோர் வரை அனைவரும் தங்கத்தில் செய்யும் முதலீடு மற்றும் தங்கத்தின் மீது வாங்கும் கடன் அனைத்தையும் எளிது என நம்புகின்றனர். ஆகவே இதன் விற்பனை இன்றளவும் இன்றியமையாதது, என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

வீட்டிலிருந்த படி, தங்கம் விலை அறிய; (Find out the price of gold at home)

வீட்டிலிருந்தபடியே, தங்கத்தின் விலைகளை நீங்கள் எளிதாகக் கண்டறியலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, 8955664433 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுத்தால் போதும், உங்கள் தொலைபேசியில் ஒரு செய்தி வரும், அதில் சமீபத்திய கட்டணங்களை நீங்கள் பார்த்து பயனடையலாம்.

மேலும் படிக்க:

JSY: ஜனனி சுரக்ஷா யோஜனா: பெண்களுக்கு ரூ 3400 நிதி உதவி, எப்படி விண்ணப்பிப்பது ?

Poco M4 Pro 5G: ரூ. 15 ஆயிரம், பட்ஜெட்டில் 5ஜி ஸ்மார்ட்போன்!

English Summary: Change In Drastic Gold price! Price Status Inside!

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.