College Students Can Apply: Dharmapuri Collector Notice!
தருமபுரி மாவட்டத்தில் தமிழக அரசின் கீழ் செயல்படும் விடுதிகளில் சேருவதற்குக் கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சாந்தி தெரிவித்து இருக்கிறார். இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
தருமபுரி மாவட்டதில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் தருமபுரி அரசு கலைக்கல்லூரி அருகில் ஒரு கல்லூரி மாணவர் விடுதியும், 2 கல்லூரி மாணவியர் விடுதிகளும் உள்ளன. அதோடு, காரிமங்கலம் வட்டம், பெரியாம்பட்டியில் ஒரு கல்லூரி மாணவியர் விடுதி என மொத்தமாக ஒரு கல்லூரி மாணவர் விடுதியும் மற்றும் 3 கல்லூரி மாணவியர் விடுதிகளும் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், 2022-2023 ஆம் கல்வி ஆண்டில் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் தாங்கள் படிக்கும் கல்லூரிக்கு அருகில் இருக்கக் கூடிய விடுதிகளில் தங்கிப் படிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. அவ்வகையில் ஆதிதிராவிடர் நல கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான விடுதிகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை அந்தந்த விடுதியினுடைய காப்பாளர்களிடம் பெற்று கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: TNPSC: நில அளவர்-வரைவாளருக்குத் தேர்வு: 1089 காலிப்பணியிடங்கள்!
விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளது பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவ, மாணவியர்கள் கட்டாயமாக வங்கி கணக்கு ஒன்றைத் தொடங்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதோடு, விண்ணப்ப படிவத்தில் கட்டாயம் ஆதார் எண் பூர்த்தி செய்யப்பட்டிருப்பது அவசியம் ஆகும்.
அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பப் படிவத்தினை முழுமையாகப் பூர்த்தி செய்து, மாணவ, மாணவிகளின் புகைப்படம் ஒட்டி அவ்விண்ணப்பத்தில் அவர் அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களின் சான்றொப்பம் பெறுதல் வேண்டும். இந்நிலையில் அதைச் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளரிடம் நேரில் வழங்க வேண்டும்.
மேல் கூறியபடி, விடுதிகளில் சேருவதற்கு விண்ணப்பிப்பதற்குக் கடைசி நாள் வரும் 5-ஆம் தேதி (05.08.2022) ஆகும். இவ்விடுதிகளில் சேர விரும்பும் தகுதியான கல்லூரி மாணவ, மாணவியர்கள் உடன் விண்ணப்பித்து, பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
Share your comments