1. செய்திகள்

விவசாயிகளே தேதி மாறிடுச்சு... வீணா அலையாதீங்க...!

Harishanker R P
Harishanker R P

மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த மாதத்திம் ஏப்ரல் 29-ஆம் தேதி நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர் நிர்வாக காரணங்களால் மே 30 -ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ காந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் குறைதீர் கூட்டம் 

ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தேதியில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் விவசாயம் சார்ந்த துறை சார்ந்த அதிகாரிகளுடன் விவசாயிகளும் கலந்து கொண்டு தங்கள் குறைகளை அரசிடம் தெரிவித்து அதற்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.

மே 29 -ம் தேதி நடைபெறும் கூட்டம் 

அந்த வகையில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வருகின்ற மே 29-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கார்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மயிலாடுதுறை மாவட்டத்தின் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ காந்த் தலைமையில் 29.05.2025 வியாழக்கிழமை அன்று காலை 10.15 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தேதி மாற்றம்

இந்நிலையில் நாளை 29 -ம் தேதி நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டமானது நிர்வாக காரணங்களால் நாளை மறுநாள் மே 30-ம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ காந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில் கலந்துகொள்ளும் துறைகள்

இக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட அனைத்து முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் பங்கேற்று வேளாண்மை, நீர்ப்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மை பொறியியல்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், தோட்டக்கலை துறை ஆகிய துறைகளில் விவசாயம் தொடர்புடைய கருத்துகளை தெரிவிக்கலாம். 

விவசாயிகளுக்கு அனுமதி 

மேலும், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பேச விரும்பும் விவசாய சங்க தலைவர்கள், விவசாய பிரதிநிதிகள் மற்றும் முன்னோடி விவசாயிகள் அனைவரும் கூட்டம் நடைபெறும் நாள் அன்று காலை 9.30 மணி முதல் பதிவு மேற்கொண்டு டோக்கன் பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட சங்கங்களில் இருந்து சங்க தலைவர்களும், தனிப்பட்ட விவசாயிகளும் கலந்து கொண்டு தங்கள் குறைகளை பேசலாம் என கூறப்பட்டுள்ளது.

பிரதான தொழிலான விவசாயம் 

டெல்டா மாவட்டங்களில் காவிரி கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் முக்கிய தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மாவட்டத்தில் விவசாயம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக நிலத்தடி நீரை கொண்டு இப்பகுதியில் அதிக விவசாயம் நடைபெறுவதால் சம்பா மற்றும் குறுவை சாகுபடி பெருமளவு செய்யப்பட்டு வருகிறது. மேலும் நெல் மற்றும் இன்றி மாற்று பயிராக வாழை, கரும்பு, மஞ்சள், பருத்தி, மற்றும் காய்கறி வகைகளும் பயிரிடப்பட்டு இப்பகுதி விவசாயிகள் விவசாயத்தை தீவிரமாக செய்து வருகின்றன. இந்த நிலையில் அரசு அறிவிக்கும் திட்டங்கள் உள்ளிட்ட பயன்களை முழுமையாக பெறுவதற்கும் தங்கள் குறைகளை அரசுக்கு தெரிவிப்பதற்கும் இந்த விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இவ்மாவட்டத்தில் பார்க்கப்படுகிறது. 

 

English Summary: Date changes announced for grievance

Like this article?

Hey! I am Harishanker R P. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.