1. செய்திகள்

கே.என்.எம்.,-1638 ரக நெல் கொள்முதல் நிறுத்தம்; வாணிப கழக முடிவால் விவசாயிகள் அதிர்ச்சி

Harishanker R P
Harishanker R P

தமிழகத்தில் பயிரிடப்பட்டுள்ள, 'கே.என்.எம்., - 1638' ரக நெல்லை கொள்முதல் செய்ய, வாணிப கழகம் மறுத்து வருவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

நெல் மூட்டைகள் தேக்கம்


இங்கு விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல், அரசின் உணவு தானிய திட்டத்திற்காக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வாயிலாக கொள்முதல் செய்யப்படுகிறது.

நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான அரிசி ஆலைகள் மட்டுமின்றி, தனியார் ஆலைகளுக்கும் இந்த நெல் அனுப்பப்பட்டு, அரிசியாக மாற்றப்பட்டு கிடங்குகளில் சேமிக்கப்படுகிறது.

நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான அரிசி ஆலைகள் மட்டுமின்றி, தனியார் ஆலைகளுக்கும் இந்த நெல் அனுப்பப்பட்டு, அரிசியாக மாற்றப்பட்டு கிடங்குகளில் சேமிக்கப்படுகிறது.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் நெல் கொள்முதல் நடந்து வருகிறது.

திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில், கே.என்.எம்., - 1638 என்ற நெல் ரகம் விவசாயிகளால் நடப்பாண்டு அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

குறுகியகால பயிராக, 90 நாட்களில் விளையும் இந்த ரகம் வாயிலாக, விவசாயிகளுக்கு அதிக மகசூல் கிடைத்துள்ளது.

உற்பத்தி செய்யப்பட்ட நெல்லை, அரசு கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் எடுத்து சென்று வருகின்றனர்.

ஆனால், அரிசி உற்பத்தி குறைவாக கிடைப்பதாக கூறி, இந்த ரக நெல்லை கொள்முதல் செய்ய முடியாது என, விவசாயிகளை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

இதனால், திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில், நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வெளியேயும், உலர்களங்களிலும், பல டன் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன.

இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஜே.ஆஞ்சநேயலு கூறியதாவது:


தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்துடன், ஒப்பந்தம் செய்துள்ள தனியார் அரிசி ஆலைகளில், இந்த நெல்லை அரவை செய்து அரிசியாக்கி தருவதற்கு மறுக்கின்றனர். அதை காரணமாகக் கூறி, கொள்முதலை வாணிப கழக அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர்.

கண்டுக்கொள்ளவில்லை


சமீப நாட்களாக, திடீரென்று மழை கொட்டுவதால், அறுவடை செய்த நெல்லை பாதுகாக்க முடியாமல், விவசாயிகள் திணறி வருகின்றனர். இதனால், 100 கிலோ நெல்லை, 1,000 முதல் 1,300 ரூபாய் வரை தனியாரிடம் விற்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

சாகுபடி துவங்கும் போதே வேளாண் துறை அதிகாரிகள் கூறியிருந்தால், அந்த ரகத்தை விவசாயிகள் சாகுபடி செய்திருக்க மாட்டார்கள்.

தனியார் கடைகளில், இந்த ரக நெல் விதைகளும் தாராளமாக விற்பனை செய்யப்படுகின்றன. அதையும் அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லை.

நுகர்பொருள் வாணிப கழக முடிவால், விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னைக்கு முதல்வர் ஸ்டாலினும், உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணியும் விரைந்து தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Read more:

இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை

English Summary: KNM-1638 paddy procurement halted; Farmers shocked by Chamber of Commerce decision

Like this article?

Hey! I am Harishanker R P. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.