தமிழகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் அதனை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மின் கட்டணம் (Electricity bill)
தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பல முக்கிய விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன் சமர்ப்பித்துள்ள மானியக் கோரிக்கையில், பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார்.
அதன்படி, துபாயில் புதுத்தொழில் ஒருங்கிணைப்பு மையம் அமைத்து தமிழகத்தில் புத்தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான வளங்களை உலகளவில் ஒருங்கிணைப்பது, எம்எஸ்எம்இ உற்பத்தி செய்யும் பொருட்களை சர்வதேச அளவில் சந்தைப்படுத்த மெய்நிகர் கண்காட்சியகம் உருவாக்குவது, ரூ.175 கோடி முதலீட்டில் தொழில் முனைவோருக்கு பயன்படத்தக்க அடுக்குமாடி தொழில் வளாகத்தை கிண்டியில் உருவாக்குவது போன்றவை சிறு, குறு நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதனை குறைக்க வேண்டும் எனவும், அவர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என பல முறை கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அது தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை அவர் தெரிவித்துள்ளார். இந்த கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என டான்ஸ்டியா தரப்பில் கோரிக்கை விடுக்கப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
பத்திரிகையாளர் பென்சன் ரூ.12000 ஆக உயர்வு: தமிழக அமைச்சர் அறிவிப்பு!
PM Kisan: 14ஆவது தவணை 2000 ரூபாய் வேண்டுமா? உடனே இதைப் பண்ணுங்க!
Share your comments