1. செய்திகள்

அமரித் சரோவர் திட்ட பணிகளை காண ஆட்சியர் திடீர் விசிட்.. அதிர்ந்த அதிகாரிகள்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
dharmapuri Collector a surprise visit to see Amrit Sarovar project work

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு வட்டாரத்தில் செக்கோடி மற்றும் பூகானஅள்ளி கிராமங்களின் நீர்வடிப்பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி இஆப., அவர்கள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள்.

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு வட்டாரத்தில் செக்கோடி மற்றும் பூகானஅள்ளி கிராமங்களின் நீர்வடிப்பகுதிகளில் அமரித் சரோவர் திட்ட பணிகள், கசிவு நீர்குட்டைகள், பெரியதடுப்பணை, தானிய உலர்களம் அமைத்தல் மற்றும் விவசாயிகளுக்கு மின்விசைத்தெளிப்பான் விநியோகம் ஆகிய திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி இஆப., அவர்கள் நேற்று (12.04.2023) திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள். இதனைத்தொடர்ந்து தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்திலுள்ள பிக்கிலி ஊராட்சி மலையூர் கிராமத்தில் நடைப்பெற்று வரும் சாலைப்பணிகளையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் அமரித் சரோவர் திட்டத்தினை பார்வையிட்டு அதன் சுற்றுப்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள மரக்கன்று நடவினையும் ஆய்வு செய்தார்கள். தானியக்களத்தினை ஆய்வு மேற்கொண்டு அதன் பயன்பாடு குறித்து கேட்டறிந்தார்கள். மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெரிய தடுப்பணைகள், கசிவு நீர்குட்டைகள் ஆய்வு மேற்கொண்டதுடன் ஒரு விவசாயிக்கு மின்விசைத்தெளிப்பான் வழங்கினார்கள்.

இயற்கை வள மேம்பாட்டுப்பணிகளில் நீர் ஆதாரத்தை பெருக்குவதற்காக கசிவுநீர்குட்டைகள், பெரிய தடுப்பணைகள், ஏரி தூர்வாருதல், கிராம குட்டைகள், Recharge Shaft மற்றும் நீர் அமிழ்வுக்குட்டைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பாலக்கோடு வட்டாரத்தில் 5405 எக்டர் பரப்பளவில் 7 கிராமங்களில் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை திட்டப்பணிகள் 5 ஆண்டு திட்டப்பணிகளாக 2021-2022 நிதியாண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டப்பணிகளில் விவசாயிகள் சுய உதவி குழுக்கள் மற்றும் பயனாளி குழுக்களுக்கு பயிற்சியும், வேளாண்மை உற்பத்தி திட்டப் பணிகளில் இடுப்பொருட்கள் விநியோகம் மற்றும் செயல் விளக்கங்கள் அமைக்கப்படுகின்றன. சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதிகளும் நிலமற்றோர்க்கு இடுப்பொருட்களும் வழங்கப்படுகின்றன.

இந்த ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குநர் விஜயா, வேளாண்மை துணை இயக்குநர் கு.ஜெகதீசன், வேளாண்மை உதவி இயக்குநர் கு.சகாயராணி, உதவி பொறியாளர் பொ.பத்மாவதி, நீர்வடிப்பகுதி பொறியாளர் வேலவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஆய்வு பணிகளுக்கு முன்னதாக வட்டுவனஅள்ளி ஊராட்சி, ஜெல்மாரம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி இஆப., அவர்கள் 229 பயனாளிகளுக்கு ரூ.1.17 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை நேற்று வழங்கினார்.

தோட்டக்கலைத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.4.03 இலட்சம் மதிப்பீட்டில் சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கான மானிய உதவிகளும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.3.36 இலட்சம் மதிப்பீட்டில் சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கான உதவிகளையும் ஆட்சியர் வழங்கினார்.

மேலும் காண்க:

சென்னை டூ பாண்டிச்சேரி முதல் “பீர் பஸ்” - டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

English Summary: dharmapuri Collector a surprise visit to see Amrit Sarovar project work Published on: 13 April 2023, 09:50 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.