மீன் வரத்து அதிகரித்துள்ளதாலும், மீன்களை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டாததாலும் மீன் விலை கடுமையாகக் குறைந்துள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், முட்டம், மீன்பிடி துறைமுகங்களைத் தளமாகக் கொண்டு சுமார் 500-க்கும் மேல் எண்ணிக்கை கொண்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்
மேலும் படிக்க: பெண்களுக்கு ரூ. 6000 கிடைக்கும் மத்திய அரசின் திட்டம்: இன்றே அப்ளை பண்ணுங்க!
சுமார் 7 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை நடுக்கடலில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் விசைப்படகு மீனவர்கள் பெரும்பாலும் ஏற்றுமதி வகையான மீன்களான கணவாய், இறால், கிளிமீன் போன்ற மீன்களை பிடிப்பதில் மிகுந்த ஆர்வத்தினைக் காட்டி வருகின்றன.
தற்பொழுது கணவாய், இறால் போன்ற மீன்கள் சீசன் இல்லாத நிலையில் கொழிசாளை, நாக்கண்டம் போன்ற மீன்களை அதிக அளவில் பிடித்து வருகின்றனர். இன்று குளச்சல் மீன்பிடி துறைமுகத்திற்குக் கரை திரும்பிய விசைப் படகுகளில் டன் கணக்கில் கொழிசாளை மீன்கள் பிடிபட்டிருந்த நிலையில் அவை விற்பனைக்காக துறைமுகத்தில் மலைபோல் குவிக்கப்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில், வரத்து அதிகரிப்பினால் வியாபாரிகள் அதிக அளவில் வாங்க ஆர்வம் காட்டாத நிலையில் மீன்களின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்து உள்ளது.
பொதுவாக 1 கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் கொழிசாளை மீன் 20 ரூபாய் என விலை சரிந்து கோழி தீவனத்திற்காக விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மீனவர்களும் விற்பனையாளர்களும் கவலையடைந்துள்ளனர். மீன்கள் விலையில் மேலும் சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகக் வியாபாரிகள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க
7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு DA உயர்வு!
நீரைவிலக்கிக் கொண்டு பாய்ந்த படகுகள்! துடுப்புப் போட்டு அசத்திய ராகுல் காந்தி!
Share your comments