Draupati Murmu becomes the 15th President of India
நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு தேர்வானார். கடந்த திங்கட்கிழமை குடியரசு தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் 37% வாக்குகள் வித்தியாசத்தில் திரவுபதி முர்மு வெற்றி பெற்றார். இதன் மூலம் பழங்குடியின வகுப்பை சேர்ந்த முதல் ஜனாதிபதி என்னும் சிறப்பை பெற்றார். இவர் வரும் 25-ல் பதவியேற்கிறார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் (President election)
இந்தியாவின் ஜனாதிபதியான ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து 15வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான ஓட்டு எண்ணிக்கை கடந்த 18ல் நடந்து முடிந்தது. இதில் தே.ஜ., கூட்டணியின் ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் நின்ற யஷ்வந்த் சின்ஹா போட்டியிட்டனர். இதில் மொத்தமுள்ள 771 எம்.பி.,க்களில் 763 பேரும், 4,025 எம்எல்ஏ.,க்களில் 3,991 பேரும் ஓட்டளித்திருந்தனர்.
15வது ஜனாதிபதி (15th President)
பார்லிமென்ட் வளாகத்தில் இன்று (ஜூலை 21) காலை 11 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. எம்.பி.,க்களின் ஓட்டுக்கு தலா 700 புள்ளியும், எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டுக்கு மாநிலத்தின் மக்கள் தொகையின் அடிப்படையில் புள்ளிகள் அளிக்கப்படும். முதலில் எம்.பி.,க்களின் ஓட்டுகள் எண்ணப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாநில வாரியாக எம்எல்ஏ.,க்களின் ஓட்டுகள் எண்ணப்பட்டன. ஓட்டு எண்ணிக்கையின் போது தொடர்ந்து முன்னிலை பெற்று வந்த நிலையில் முடிவில் திரவுபதி முர்மு வெற்றி பெறுவது உறுதியானது.
எதிர்க்கட்சிகள் வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹா தோல்வியும் உறுதியானது. இதையடுத்து நாட்டின் 15வது ஜனாதிபதி ஆகிறார் திரவுபதி முர்மு. அவருக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் , பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள திரவுபதி முர்முவுக்கு பிரதமர் மோடி பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
வாக்குகள் (Votes)
திரவுபதி முர்மு: 5,77777
யஷவந்த்சினஹா: 2,61,062
திரவுபதி முர்மு ஜனாதிபதியாக வரும் 25-ம் தேதி பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை பா.ஜ., செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. இதையடுத்து அவரது சொந்த மாநிலமான ஒடிசாவில் பழங்குடியினர் ஆடிப்பாடி கொண்டாடி வருகின்றனர்.
யார் இந்த திரவுபதி முர்மு?
ஒடிசாவைச் சேர்ந்த பழங்குடி இனப் பெண்ணான திரவுபதி முர்மு, ஜார்கண்ட் கவர்னராக இருந்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி வெற்றிப்பெற்றதால், நாட்டின் முதல் பழங்குடியின ஜனாதிபதி என்னும் பெருமையை பெற்றார். அதேபோல், இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு பிறந்த ஒருவர் நாட்டின் ஜனாதிபதி ஆவது இதுவே முதல்முறையாகும்.
மேலும் படிக்க
பென்சன் தொகையை உயர்த்த பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு பரிந்துரை!
இந்தியாவில் முதன்முதலாக சென்னையில் ராக்கெட் இஞ்சின் ஆலை துவக்கம்!
Share your comments