புதுவை, கர்நாடகம், ஆந்திரா தவிர்த்து மற்ற மாநிலங்களிலிருந்து தமிழகம் வர இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தாக்கம் (Corona impact)
கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தமிழகத்திற்குள்ளே பிற மாநிலங்களிலிருந்து வர இ-பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. பின்னர் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்ததால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகளால் தமிழக அரசு அந்த உத்தரவை தளர்த்தியது.
இந்நிலையில் மீண்டும் மற்ற மாநிலங்களில் கொரோனா தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
கட்டுப்படுத்தும் கட்டாயம் (Forced to control)
இதன் காரணமாக, நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த வேண்டியக் கட்டாயச் சூழ்நிலையைத் தமிழகம் எதிர்கொண்டுள்ளது.
தொற்றுத் தடுப்பு (Infection prevention)
இதன் அடிப்படையில், எல்லைகளில் மீண்டும் கொரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அரசு அறிவிப்பு (Government Notice)
இதையடுத்து, வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோர் அனைவருக்கும் இ-பாஸ் கட்டாயம்.
தனிப்படுத்துதலில் விலக்கு (Exclude in personalization)
அதேபோல் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து வருவோர்கள் தவிர, மற்ற மாநிலங்களில் இருந்து வருவோர்க்கும் இ-பாஸ் கட்டாயம். வணிக ரீதியான பயணமாக தமிழகத்தில் 3 நாட்கள் தங்குவோருக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க...
தூத்துக்குடியில் பிசானப் பருவ நெல் அறுவடை தீவிரம்: மகசூல் குறைவால் விவசாயிகள் வேதனை
அறுவடை நடந்து வருவதால் வைக்கோல் விற்பனை தொடக்கம்! ஏக்கருக்கு ரூ. 5,000 கிடைக்கிறது!
Share your comments